அரசு மருத்துவமனையில் ஸ்கேனுக்கு ரூ.2500.. அமைச்சர் மா.சு ஆய்வின்போது அதிர்ச்சி: உடனே அதிரடி ஆக்ஷன்!
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டபோது, ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது - தனியார் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொண்டு பரிசோதனை செய்ததால் ஒப்பந்தம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையம் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் (Krishna Diagnostics) பொது - தனியார் கூட்டில் (PPP Mode) ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. அந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2500 பெற்று பரிசோதனை மேற்கொண்டதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.

உடனடியாக அதற்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இன்று ஒரு நாளில் மட்டும் அந்த ஸ்கேன் மையத்தில் பரிசோதனைகள் மேற்கொண்ட 10 பேரில் 7 பேரிடம் ஸ்கேன் மையம் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் ரூ.2500 பணம் பெற்றுக்கொண்டு ஸ்கேன் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் நிறுவனம், பொது - தனியார் கூட்டில் (PPP Mode) செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும், தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் தருவிக்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications