தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏ வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம்! தேனி மாவட்ட அரசியலில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

தேனி: திமுக சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்ட அரசியலில் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இயங்கி வந்தவர்கள் கம்பம் ராமகிருஷ்ணனும், ஓ.பன்னீர்செல்வமும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பழைய கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டு படியேறி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னுபன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னு

கம்பம் ராமகிருஷ்ணன்

கம்பம் ராமகிருஷ்ணன்

திமுக சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணனின் அண்ணன் மனைவி கீதா 4 நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து ஆறுதல் தெரிவிப்பதற்காகசென்ற ஓ.பன்னீர்செல்வம், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் ஆகியோருக்கு ஆறுதல் கூறிவிட்டு சில நிமிடங்கள் மட்டும் தேனி மாவட்ட அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

அரசியலில் முக்கியத்துவம்

அரசியலில் முக்கியத்துவம்

ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவரது வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் துக்கம் விசாரிக்கச் சென்றிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் பின்னணியில் துளியளவும் அரசியல் காரணங்கள் இல்லை எனக் கூறும் ஓ.பி.எஸ்.தரப்பு, அரசியல் பண்பாடு மற்றும் நாகரீகத்தின் அடிப்படையிலேயே திமுக எம்.எல்.ஏ.வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றதாக தெரிவிக்கிறது.

திமுகவினர் வரவில்லை

திமுகவினர் வரவில்லை

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், திமுக மாவட்டச் செயலாளர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க ஓ.பன்னீர்செல்வமே சென்று வந்த நிலையிலும் உள்ளூர் அரசியல் காரணமாக சொந்தக் கட்சிக்காரர்களான திமுகவினர் பலரே கம்பம் ராமகிருஷ்ணனை சந்தித்து துக்கம் விசாரிக்க செல்லவில்லை என்பது தான். அண்மையில் நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலில் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற கம்பம் ராமகிருஷ்ணன் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.

 கடும் போட்டி

கடும் போட்டி

காரணம் அந்தளவு அவருக்கு கடும் போட்டி இருந்தது தான். இதனிடையே தேனி மாவட்ட அரசியலில் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இயங்கி வந்தவர்கள் கம்பம் ராமகிருஷ்ணனும், ஓ.பன்னீர்செல்வமும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
O. Panneerselvam has gone to the home of Kambam Ramakrishnan, DMK legislator and DMK secretary of Theni South district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X