போடிநாயக்கனூர் , தேனி ரயில் நிலையங்களில் பிட் லைன் வசதி வருமா? பயணிகள் சங்கம் கோரிக்கை
தேனி: மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட போடிநாயக்கனூர் ரயில் நிலைய டெர்மினல் யார்டு பகுதியில் ஒரு Pit Line அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்குத் தேவையான போதுமான இடவசதி போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் இதனை உடனடியாக பரிசீலித்து, Pit Line அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று மதுரை போடிநாயக்கனூர் ரயில் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், தேனி ரயில் நிலையத்தில் கூடுதலாக இரண்டு Shunting Lines அமைப்பதற்கும் ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும், ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான வசதிகள் உருவாகும்.

போடிநாயக்கனூர் ரயில் நிலையம் தற்போது ஒரு Terminal Station ஆக இருப்பதால், இங்கிருந்து வடக்கு நோக்கி பிற மாநிலங்களுக்கு இதுவரை எந்தவொரு நேரடி ரயில் சேவையும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், போடிநாயக்கனூரில் Pit Line போன்ற பராமரிப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் நீண்ட தூர மற்றும் பிற மாநில ரயில் சேவைகளை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஏலக்காய் பார்சல் போக்குவரத்து
போடிநாயக்கனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் முக்கிய வர்த்தகப் பொருட்களில் ஏலக்காய் முக்கியமானது. கடந்த காலங்களில் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தின் மூலம் ஏலக்காய் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சில நிர்வாக காரணங்களால் ஏலக்காய் ரயில் மூலம் ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ரயில்வே பயனாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏலக்காய் பார்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தேவையான அதிகாரியை நியமித்து, பார்சல் அலுவலகத்தின் மூலம் ஏலக்காயை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்புவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், போடிநாயக்கனூர் பகுதியில் குறைந்தபட்சம் ஒரு நவீன Warehouse / Storage Facility அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஏலக்காய் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து, ரயில் மூலம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும்.
இந்த விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால், போடிநாயக்கனூர் ரயில் நிலையத்திலிருந்து ஏலக்காய் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது.
எனவே, Pit Line அமைத்தல், தேனி ரயில் நிலையத்தில் இரண்டு கூடுதல் Shunting Lines அமைத்தல், ஏலக்காய் பார்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குதல் மற்றும் Warehouse வசதி ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் முன்னுரிமையுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" இவ்வாறு கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
