அமைச்சர் கீர்த்தனா எங்கே! சிஎம் விஜய்யுடன் லண்டனில் ‘வேண்டப்பட்டவர்கள்’.. விடாமல் அடித்த அதிமுக மாஜி

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் தொழில் முதலீடு எதற்கு என்று புரியவில்லை. தொழில்துறை அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை. அதேபோன்று அரசுத்துறை அதிகாரிகளை சரியாக அழைத்துச் செல்லாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே தமிழக முதலமைச்சர் அழைத்துச் சென்றுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.

RB Udhayakuma Vijay trisha

அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூர் நகரக் கழகத்தின் சார்பில் சின்னமனூர் கண்ணாடி கடை மூக்கு பகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது,

ஆர்பி உதயகுமார்

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்," உலகம் போற்றுகின்ற வகையில் வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் பொதுவாக இடைத்தேர்தல் எதற்காக வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

இடைத்தேர்தல்

ஆனால் தற்போது வந்து வந்துள்ள இடைத்தேர்தல் துரோகத்தின் வெளிப்பாடு. மக்கள் அதனைப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர் அதை அனைத்தையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும். தற்போது முதலமைச்சராக வந்துள்ள விஜய் திரையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நீஜத்திலும் நடித்து வருகிறார்.

கடன் தள்ளுபடி

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை நாற்பதாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இருந்த போதிலும் மீனவர்கள் பிரச்சனை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மனதில் கொள்ளாமல் புதிதாக தலைமைச் செயலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை அவர் கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் விஜய்

அதேபோன்று தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீடு எதற்கு என்று புரியவில்லை. தொழில்துறை அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை. அதேபோன்று அரசுத்துறை அதிகாரிகளை சரியாக அழைத்துச் செல்லாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே தமிழக முதலமைச்சர் அழைத்துச் சென்றுள்ளார். எனவே தமிழக முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் வரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதிமுக வேட்பாளர்கள்

அதேபோன்று தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளை மனதில் கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் விரக்தியில் உள்ளனர். எனவே, வருகின்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்" என அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+