குடிபோதையில் தொந்தரவு : அப்பாவை அடித்துக்கொன்ற மகன்... கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி

குடிபோதையில் அம்மாவை தொந்தரவு செய்த அப்பாவை தேனியில் மகன் கல்லால் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல திருத்தணியில் குடிபோதையில் உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்த கணவனை மனைவ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அப்பாவை அடித்துக்கொன்ற மகன்.. கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி- வீடியோ

    சென்னை/தேனி : குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிகின்றன. தேனி அருகே குடித்து விட்டு அம்மாவை அடித்த அப்பாவை மகனே தாயுடன் சேர்ந்து கல்லால் தலையில் அடித்து படுகொலை செய்துள்ளார். மகன் தப்பி ஓடிய நிலையில் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல திருத்தணி அருகே குடித்து விட்டு தொந்தரவு செய்த கணவனே மனைவி அடித்துக் கொன்று பிரிட்ஜில் வைத்து பின்னர் புதைத்துள்ளார்.

    மகனால் அடித்துக்கொல்லப்பட்ட நபரின் பெயர் அந்தோணிராஜா. இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி. சிந்தலைச்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஜெலினாமேரி, 47 இந்த தம்பதியரின் மகன் ராஜ்குமார்,22.

    மதுபோதைக்கு அடிமையான அந்தோணிராஜா இரவு மட்டுமல்லாது பகல் பொழுதிலும் குடித்து விட்டு தனது மனைவியுடன் தினமும் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இது அவரது மகனுக்குப் பிடிக்கவில்லை.

    அடித்துக்கொன்ற மகன்

    அடித்துக்கொன்ற மகன்

    இந்நிலையில் சனிக்கிழமையன்று வழக்கம் போல குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து சித்தரவதை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் ராஜ்குமார், தடுத்தும் நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் தனது மனைவியை அடித்து வந்துள்ளார். தனது கண்ணெதிரே தனது தாயை அடித்து கொடுமைப் படுத்துவதை பார்த்து சகிக்க முடியாத ராஜ்குமார் பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து தன் தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

     போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதில் நிலை தடுமாறி அந்தோணி ராஜா கீழே விழுந்துள்ளார் அதன் பின்பு தாயும் மகனும் சேர்ந்து அந்தோணி ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அந்தோணி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    தேவாரம் காவல் நிலைய ஆய்வாளர் பரிமளாதேவி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தோணிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் தப்பி ஓட்டம்

    மகன் தப்பி ஓட்டம்

    போலீசார் விசாரணையில் மகனுடன் சேர்ந்து கொலை செய்தததை ஜெலினாமேரி ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவான அவரது மகன் ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    குடிகார கணவன்

    குடிகார கணவன்

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், அவரது மனைவி முனியம்மாள். இந்த தம்பதியருக்கு 17 வயது மகன் உள்ளனர். முருகேசன் தினமும் குடித்து விட்டு வந்து தொந்தரவு செய்வாராம். வயதுக்கு வந்த மகன் இருந்தாலும் உறவுக்கு அழைத்து அடிப்பாராம்.

    மரணத்தில் சந்தேகம்

    மரணத்தில் சந்தேகம்

    இந்த நிலையில்தான் முருகேசன் திடீரென இறந்து போனார். கை கால் செயலிழந்து விட்டதாக முருகேசனை ஆட்டோவில் கொண்டு சென்ற முனியம்மாள் இறந்து விட்டதாக கூறினார். கூடவே முனியம்மாளின் அண்ணன் ஏழுமலை, அண்ணி ஷீபா ஆகியோரும் இருந்தனர். அதை அக்கம் பக்கத்தினர் நம்பவில்லை.

    கொலை செய்த மனைவி

    கொலை செய்த மனைவி

    முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்த போது கழுத்தில் கயிறு அழுத்திய தடம் இருந்தது கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசில் புகார் அளித்தனர். முனியம்மாளை போலீசார் விசாரித்த போது சில உண்மைகள் வெளிவந்தன. முருகேசன் அடித்து உதைத்ததோடு மகன் முன்னிலையிலேயே ஆபாசமாக பேசவே, அண்ணன் ஏழுமலை உதவியுடன் கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக நாடகமாடியுள்ளார்.

    காட்டிக்கொடுத்த தடயம்

    காட்டிக்கொடுத்த தடயம்

    முருகேசன் இயற்கையாக உயிரிழந்ததாக கூறிய மூவரும் கழுத்தில் கயிறு இறுக்கிய தடயத்தை மறைக்க மறந்து விட்டனர். கடைசியில் அதுவே காட்டிக்கொடுத்து விட்டது. கடைசியில் போலீசில் சிக்கிக்கொண்டார். குடும்பத்தகராறுகள் கொலையில் முடிவதால் காவல்நிலையத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+