அவரை தூண்டில் போட்டு இழுத்தோம்.. தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஸ்டாலின் பகிர்ந்த அசத்தல் ரகசியம்!

அமமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தூண்டில் போட்டு கட்சிக்குள் இழுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் பேசிய இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தேனி: அமமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தூண்டில் போட்டு கட்சிக்குள் இழுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் பேசிய இருக்கிறார்.

தங்க தமிழ்ச்செல்வன் வருகைக்கு பின் தேனியில் திமுக கொஞ்சம் கொஞ்சமாக வலிமைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேனி வீரப்பாண்டி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் தங்க தமிழ்ச்செல்வனை புகழ்ந்து நீண்ட நேரம் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் சேருவதற்கு முன் நடந்த சுவாரசியமான விஷயங்களை ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

சரியான இடம்

சரியான இடம்

ஸ்டாலின் தனது பேச்சில், மாற்று கட்சியினர் எல்லோரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து இருக்கிறார்கள். திமுகதான் உங்களுக்கு சரியான இடம். நீங்கள் சரியான இடத்தில்தான் கட்சியில்தான் தற்போது சேர்ந்துள்ளீர்கள்.

பெரிய பலம்

பெரிய பலம்

உங்களின் வருகைக்கு பின் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.தங்கதமிழ்செல்வனிடம் இருக்கும் கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே கிடையாது. அவரின் பேட்டிகளை பார்த்து நான் வியந்து இருக்கிறேன்.

முகம்

முகம்

அவரை கிண்டல் செய்தும், கோபப்படும் அளவிற்கும் பலர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் கொஞ்சம் கூட கோபம் அடைய மாட்டார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அவருக்கு அந்த பழமொழி கண்டிப்பாக பொருந்தும்.

பலம்

பலம்

சட்டசபையில் அவர் பேசியதை கூர்ந்து கவனித்து இருக்கிறேன். ஆளும் கட்சியில் இருக்கும் நபர்கள் சமயங்களில் வரம்பு மீறி பேசியதுண்டு. ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் எப்போதும் கோபம் அடைந்தது கிடையாது. மிகவும் நாகரீகரமாக பேசுவார். என்னிடம் நிறைய முறை சட்டசபைக்கு வெளியே வந்து பேசி இருக்கிறார்.

பெரிய பலம்

பெரிய பலம்

என்னிடம் சட்டசபைக்கு வெளியே வந்து நான் நன்றாக பேசினால், அண்ணா சூப்பரா பேசுனீங்க என்று கூறுவார். அந்த அளவிற்கு அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவர். அவரை எங்கள் கட்சி நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். தேனியில் தங்க தமிழ்செல்வன் வருகைக்கு பின் கட்சி பெரிய அளவில் பலம் அடைந்துள்ளது.

எப்படி சேர்ந்தார்

எப்படி சேர்ந்தார்

தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் தூண்டில் போட்டு இழுக்க முயற்சி செய்தோம். பலமுறை அவரை திமுகவிற்கு கொண்டு வர நினைத்தோம். ஆனால் அவர் எங்கள் தூண்டிலில் சிக்கவே இல்லை. ஆனால் இப்போது அவர் எங்களுக்குள் வந்துவிட்டார்.

லேட்டாக வந்தார்

லேட்டாக வந்தார்

அவர் லேட்டாக வந்து இருக்கிறார். ஆனாலும் அவர் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் விரைவில் தமிழகத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது தேனியில் திமுகவின் பலம் தெரியும், என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+