என்னை எம்பியாக்குங்கள்! கட்டபொம்மன் சிலை முன்னாடி உட்காருறேன்! தங்க தமிழ்ச்செல்வன் உறுதி
தேனி: தேனி எம்பி தொகுதியில் யாருக்கெல்லாம் ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் கிடைக்கவில்லையோ அதையெல்லாம் கிடைப்பதற்கு நான் பாடுபடுவேன் என திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசுகையில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலின் முதல்வராக வந்தால் நிறைவேற்றுவதாக சில வாக்குறுதிகளை தந்தார். அவர் முதல்வரானதும் ரூ 1000 உரிமைத் தொகை தந்தார். அந்த தொகை கிடைக்காதவர்கள் யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் ஜெயித்தவுடன், கட்டபொம்மன் சிலைக்கு முன்னாடி வந்து உட்காருவேன்.
அதிகாரிகளை எல்லாம் அழைப்பேன், உங்களிடம் இருந்து மனுவை வாங்கிக் கொடுத்து 1000 ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் செல்வேன். மகளிர் பேருந்து பயணத்தில் இலவசமாக சென்று வருகிறீர்கள். அது போல் கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிக்கு மாதம் ரூ 1000 தருகிறார்கள்.
14 லட்சம் குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கியுள்ளார். சிலிண்டரின் விலை பாஜக ஆட்சியில் ரூ 1200, காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 400. பெட்ரோல் விலை பாஜக ஆட்சியில் ரூ 105, காங்கிரஸ் ஆட்சியில் ரூ 70. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒரு சிலிண்டரின் விலை ரூ 500 க்கு தருகிறேன் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 75 க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். தினகரன் ஒரு வோட்டுக்கு ரூ 5000 தரேன் என்கிறார். அவர் ஜெயித்து என்ன செய்ய போகிறார்.
அன்று பாஜக மீது சாடு சாடுனு சாடிய தினகரன் இன்று ஒரு சீட்டுக்காகவும் வழக்கு பயத்திற்காகவும் பாஜக காலில் போய் விழுந்துள்ளார். இவர் மீது ஹவாலா மோசடியும் இரட்டை இலைக்கு பணம் கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் ஜெயிலுக்கு செல்வார். அதனால்தான் பயந்து கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார்.
தினகரன் ரூ 10 ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு போனதும் அங்கு முதல் சின்னமே உதய சூரியன் இருக்கும். அதற்கு வாக்கு அளித்து விட்டு வந்துவிடுங்கள். உங்கள் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும். தாயி கொஞ்சம் இறக்கப்படுங்கள். நான் ரொம்ப நல்லவன்.
கோட்டங்குடி ஆற்றில் ஒரு அணை கட்டினால் போடியே செல்வச் செழிப்பாக இருக்கும். இதை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறேன். ரூ 500 கோடியில் திட்டம் தயாராகி வருகிறது. நான் இங்கே நிற்கிறேன். ஆனால் இங்கு போட்டியிட்டு வென்ற ஓபிஎஸ் அண்ணன், ராமநாதபுரத்திற்கு போயிருக்காரு. எதுக்குனு தெரியலை. எனவே எனக்கு ஓட்டு போடுங்கள், அப்பறம் இந்த தேனி எம்பி தொகுதியை நான் எப்படி வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications