போன் கொடுத்தது தப்பாயா.. திருப்பூர் காதல் ஜோடிக்கு உதவிய தேனி இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
தேனி: காதல் ஜோடி தப்பியோடி திருப்பூரில் இருந்து தேனிக்கு வந்திருக்கிறது. அவர்கள் இருவருக்குமே 18 வயது நிறைவடையவில்லை. காதல் ஜோடி திருப்பூரில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்ற பேருந்தில் ஏறி தப்பித்து வந்துள்ளார்கள். திருப்பூரில் ஒருவர் அவர்களுக்கு போன் கொடுத்து பேச உதவி உள்ளார். அவர் கடைசியில் போலீசிடம் சிக்கி 3 மணி நேரம் அவதிப்பட்டுள்ளார். இறுதியில் அவர் மீது தவறு இல்லை என்று தெரிந்தபின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு 2 கே கிட்ஸை தாண்டி, புதிதாக வந்துள்ள Gen Z கிட்சுகள் வாழ்க்கையில் விரைவாக எல்லாவற்றிலும் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார்கள். தோல்வியை தாங்கி கொள்ளும் பக்குவம் இல்லை.. அவமானங்களை எப்படி கடந்து செல்வது என்று தெரியவில்லை. காதல் என்ற பெயரில் தவறான திசையில் போய் எதிர்காலத்தை தொலைக்கிறார்கள். திருப்பூரில் வசிக்கும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமி காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருப்பூர் டூ தேனி
திருப்பூரில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், சிறுமியும் பயணம் செய்தார்கள். பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை வெளியேறிய அவர்க்ள இருவரும் தங்கள் செல்போனை பயன்படுத்தினால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணி தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்கள்.
செல்போன் கேட்ட சிறுமி
இதற்கிடையே அவர்கள் காணாமல் போனதால் பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கம்பம் புதுப்பட்டி அருகே பஸ் வந்த போது, சிறுமி பெற்றோரை அருகில் இருந்தவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். தன், அம்மாவிடம் பேச வேண்டும். அவசரமாக பேச வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார். இதை கேட்ட அந்த நபர் உதவியாக செல்போனை கொடுத்துள்ளார்.
செல்போன் ஆய்வு
தொடர்ந்து தனது அம்மாவிடம் பேசிய டீன் ஏஜ் சிறுமி, தேனி மாவட்டம் கம்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருப்பூர் போலீசிடம் தெரிவித்ததனர். உடனே அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த யார், எந்த ஊர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கம்பம் போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் கூடலூரைச் சேர்ந்தவர் என்றும், சிறுமி செல்போனை வாங்கி பேசியதாகவும் கூறினார்.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து கண்டக்டரிடம் செல்போனை தரும்படி போலீசார் கூறியிருக்கிறார்கள். கண்டக்டர் வாங்கி பேசிய போது, சிறுவர், சிறுமி மற்றும் இளைஞரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படியே காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலை பெற்றோர் எதிர்த்துள்ளனர்.
செல்போன் கொடுத்தது குற்றமா
இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. 3 மணி நேரத்திற்கு பிறகு சிறுவர் சிறுமியை அறிவுரை கூறி பெற்றோரிடம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். செல்போன் கொடுத்த நபர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் காவல் நிலையத்தில் சிக்கி கொண்டார். விசாரணை முடிந்த பின்னரே விடுவிக்கப்பட்டார். செல்போன் கொடுத்ததற்கு இவ்வளவு பிரச்சனையா என்று நொந்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications