Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர வைக்கும் சுகந்தி.. ஆளை போட்டு தள்ள போட்ட ஸ்கெட்ச்.. வெளியான ஆடியோவால்.. திகிலில் தேனி!

டிக்டாக் சுகந்தி மீது அடுத்த புகார் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிக் டாக் வீடியோவில் சண்டை... பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தினர்

    தேனி: டிக்டாக் சுகந்தி ஒரு கொலை பண்ற அளவுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளாராம்... கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டுவது போல பிளான் செய்ததும் டிக்டாக் வீடியோவாகவே வெளிவந்துள்ளது அடுத்த அதிர்ச்சி! இதுதான் இப்போதைக்கு ஹாட் நியூஸ்!

    தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்துள்ளது நாகலாபுரம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர்தான் சுகந்தி.. மதுரை சுகந்தி என்றால் டிக்டாக்கில் ரொம்பவும் ஃபேமஸ்!

    கல்யாணமானவர்.. கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள்.. இதனால் பொழுதை கழிக்க டிக்டாக்கில் நுழைந்தவர் சுகந்தி.. ஆனால் "அந்த" மாதிரி பாடல்களைதான் தேர்வு செய்து வீடியோ போடுவார் இவர்.. பெரும்பாலும் எல்லாமே முக்கல், முனகல் பாடல்கள்தான்!

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    திடீரென ஆபாசமான உடையுடனும் தோன்றுவார் சுகந்தி! இதனால் ஏராளமான ஆண்கள் சுகந்தியின் வீடியோவுக்கு ரசிகர்கள் ஆனார்கள்.. இதில் சிலர் சுகந்தி செல்போனை நம்பரை வாங்கி பேசவும் தொடங்கினர்.. அடுத்து வீட்டுக்கும் வர ஆரம்பித்தனர்.. பழகும் ஆண் நண்பர்களுடன் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டு வந்திருக்கிறார் போலும்.. இதைதவிர, சுகந்திக்கு காதலர் ஒருவர் தனியாக இருக்கிறார்.

    புகார்கள்

    புகார்கள்

    இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபோது, டிக்டாக்கில் சுகந்தி வீடியோவுக்கு கீழே ஏகப்பட்ட திட்டுகள், வசவுகள் விழுந்துள்ளன. 2 பெண்கள், சுகந்திக்கும் அவரது காதலனுக்கும் எதிராக ஸ்டேஷனிலும் புகார் தந்தனர்.. அப்போதும் சுகந்தி அரசலையே! இதனிடையே, டிக்டாக்கில் சுகந்திக்கும் இளைஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரும் டிக்டாக் வீடியோ பதிவிடுபவர்தான்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இந்த பிரச்சனையில், சுகந்தியை விமர்சித்த அந்த இளைஞர், சுகந்தியின் கிராமமான நாகலாபுரம் கிராமத்தையும், அங்குள்ள பெண்களையும் சேர்த்து விமர்சித்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த நாகலாபுரம் கிராம மக்கள் பொங்கிவிட்டனர்.

    அவமானம்

    அவமானம்

    ஏற்கனவே சுகந்தி மீது கடுப்பில் இருந்தவர்கள், இப்போது சுகந்தியால் சொந்த கிராமத்துக்கு இப்படி ஒரு அவமானமா என்று ஆத்திரத்தின் உச்சிக்கு போய்விட்டனர்.. அதனால் அவரை ஊரை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்... சுகந்திக்கு ஒரு சகோதரி இருக்கிறாராம்.. அவரையும் ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லி பழனிச்செட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனையே பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    கொலை பிளான்

    கொலை பிளான்

    இந்த விவகாரம் அடங்குவதற்குள் அடுத்த இன்னொரு பிரச்சனை கிளம்பி உள்ளது... தன்னை ஊரைவிட்டு துரத்தியதற்கு டிக்டாக்கில் பழகிய அழகர் மதுரை சிவாதான் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் சுகந்தி.. மேலும் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்துவிடலாம் என்று தனது புதிய ஆண் நண்பருடன்த சேர்ந்து பிளான் செய்துள்ளார்.. அந்த டிக்டாக் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறதாம்!

    கொலை பண்ணும் பிளான் கூட டிக்டாக் வீடியோவாக வெளிவருகிறதென்றால், இப்படி ஒரு டிக்டாக் நமக்கு தேவைதானா?

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+