தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருப்படவே முடியாது! ’பவர் பாலிடிக்ஸ்’ செய்யும் ஈரோடு செங்கோட்டையன்! பட்டியலை வாசித்த ஓபிஎஸ் டீம்!

Google Oneindia Tamil News

தேனி : ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உடன் மோதல் போக்கை கையாண்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகள் எண்ணிக்கை வார வாரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் செங்கோட்டையன் குறித்து கடும் புகார்களை முன் வைத்துள்ளனர்.

பாஜக ஆதரவு காரணமாக உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பல மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க இது ஒரு நல் வாய்ப்பு எனக் கருதி அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துடித்த ஃபிபா வீரர்.. ஒரே ஒரு பிளேயருக்காக.. பிரைவேட் ஜெட்டை அனுப்பிய சவுதி சல்மான்! ஏன் தெரியுமா? துடித்த ஃபிபா வீரர்.. ஒரே ஒரு பிளேயருக்காக.. பிரைவேட் ஜெட்டை அனுப்பிய சவுதி சல்மான்! ஏன் தெரியுமா?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்சை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சாரைசாரையாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நிர்வாகிகள் ஆதரவு

நிர்வாகிகள் ஆதரவு

கடந்த நில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஓபிஎஸ் ஆதரவு திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் மற்றும் இபிஎஸ் ஆதரவாளரான தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.

தர்மர்

தர்மர்

நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் கைலாசபட்டி பண்ணை வீடு களைகட்டி காணப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி தரப்பிலிருந்து ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளை அழைத்து வந்து ஆதரவு தெரிவிக்க வைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினரான தர்மர் தலைமையில் தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று சந்திப்புக்கு ராமநாதபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நகர, ஒன்றிய செயலாளர்கள்

நகர, ஒன்றிய செயலாளர்கள்

நேற்று நண்பகலில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேலும் பலர் எடப்பாடி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வர இருப்பதாகவும் கூறினார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பெரு வெற்றி பெறும் எனவும் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம்

இதனைத் தொடர்ந்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் மாரப்பன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட 11 நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அடுத்த கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இதற்காக ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாரப்பன்,"ஜெயலலிதா காலத்தில் இருந்தே நாங்கள் அதிமுகவில் இருக்கிறோம். அந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் குரூப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த தங்களை செங்கோட்டையன் கட்டம் கட்டி உருப்படவே விடவில்லை எனவும், அவரால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம், மேலும் செங்கோட்டையனால் பாதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகள் பலரும் இன்னும் ஓபிஎஸ் தரப்புக்கு வர தயாராக இருக்கிறார்கள் எனக் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் இருந்து அடிக்கடி ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாகிகள் தாவி வருவது செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
While the number of administrators meeting and supporting O. Panneerselvam, who is dealing with the conflict with Edappadi Palaniswami regarding the issue of single leadership, is increasing every week, currently union level administrators from Erode, Ramanathapuram and other districts are supporting him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X