தேனியை கேட்டு வாங்கிய திமுக.. டிடிவி தினகரனுக்கு செக் வைக்கும் சிஷ்யர்.. காத்திருக்கும் பெரிய சவால்

Subscribe to Oneindia Tamil

தேனி: கோவை எப்படி அதிமுகவின் கோட்டையோ அதேபோல் தேனி மாவட்டமும் அதிமுகவின் கோட்டையாகும்.. கோவையை போல் 1996ம் ஆண்டு தான் கடைசியாக தேனியில் திமுக வென்றுள்ளது. அப்படியிருந்தும் தேனியை எடுத்துக்கொண்டு, தான் சர்வ சாதாரணமாக வெல்லக்கூடிய திருநெல்வேலியை காங்கிரசுக்கு திமுக கொடுத்திருப்பதன் பின்னணியை பார்ப்போம்.

திமுக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்காக மிகப்பெரிய விஷயத்தை செய்திருக்கிறது.. திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை திமுகவால் எளிதாக வெல்ல முடியும் என்று கணிப்புகள் சொல்கின்றன. ஆனால் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவிட்டு, மிகவும் சவாலான தேனி தொகுதியை வாங்கியதுடன், அதில் திமுகவே போட்டியிட போகிறது.

Why is DMK contesting in Theni constituency Big check to TTV Dhinakaran

இதேபோல் கடந்த முறை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கலை கொடுத்துவிட்டு மிகவும் சவாலான கோவையை எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கூட்டணி கட்சிகளை தாண்டி ஆளும் திமுகவினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேனியை திமுக ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி திமுகவினரிடமே இருக்கிறது. இதற்கு காரணம் டிடிவி தினகரன் என்கிறார்கள்...

டிடிவி தினகரன் இந்த முறை தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் ஓ பன்னீர்செல்வமே போட்டியிட்டாலும் போட்டியிடலாம் என்ற தகவலும் இருக்கிறது.. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் பெயரும் அடிபடுகிறது. இதில் டிடிவி தினகரனுக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிடிவி தினகரன் இந்த முறை தேனியில் போட்டியிட்டால் பெரிய அளவில் சவால் இருக்கும். அதிமுகவும் இங்கு போட்டியிடும் என்பதால் கூட்டணி கட்சிகளிடம் கொடுத்தால் இந்த தொகுதி கோவை தெற்கு தொகுதி நிலை ஏற்படும் என்பதால் உஷாரான திமுக நேரடியாக களம் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தை மக்கள் நீதி மய்யம் (கமல்) பிடித்தது. மூன்றாவது இடத்தையே காங்கிரஸ் பிடித்தது.

Why is DMK contesting in Theni constituency Big check to TTV Dhinakaran

எனவே அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதுடன், வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய இந்த முறை தேனியில் நேரடியாக களம் இறங்கி உள்ளது. கடைசியாக தேனியில் திமுக 1996 ல் வெற்றி பெற்றது. அதன்பிறகு இங்கு திமுக வெற்றி பெற்றது இல்லை.. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே கோவையை போல் தேனியையும் திமுக கொடுத்துவிடும். அதேநேரம் வலுவாக உள்ள திண்டுக்கலை யாருக்குமே பெரும்பாலும் தராது.. இந்த முறை அப்படியே மாறி உள்ளது.. திண்டுக்கல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தூக்கி கொடுத்துள்ளது.

தேனியில் திமுக சார்பில் போட்டி யார்: தேனி லோக்சபா தொகுதி, பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. தேனி மாவட்டம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளை கொண்ட தொகுதி என்பதால், இயற்கையாகவே இங்கு அதிமுகவே எப்போதும் வெற்றி பெறும்..

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தான் இங்கு போட்டியிடும். காங்கிரஸ் சார்பில் ஜேஎம் ஆரூண் இங்கு இரண்டு முறை வெற்றி பெற்றார். இங்கு கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளது.. தேனி தொகுதியில் தேவர் சமூகம், நாயுடு, செட்டியார், தலித், பிள்ளைமார் போன்ற சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இங்கு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தேவர் சமூகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் டிடிவி தினகரன் இங்கு நிற்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் டிடிவி தினகரனுக்கு போட்டியாக அவரது சிஷ்யராக ஒரு காலத்தில் இருந்த தங்க தமிழ்செல்வனை திமுக நேரடியாக களம் இறக்கும் என்கிறார்கள் திமுகவினர். அதேநேரம் போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளரான மணிமாறனும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் வாக்குகள் பாஜக டிடிவி ஓபிஎஸ் அணிக்கும் மற்றும் எடப்பாடிக்கு தனியாக பிரிந்தால் திமுக எளிதாக வெல்லும் என்கிறார்கள்.. ஒருவேளை வாக்குகள் பிரியாமல் போனால் தமிழ்நாட்டில் திமுகவிற்கு கடும் சவாலான தொகுதியாக தேனி தான் இருக்கும் என்கிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+