கவர்ச்சி அரசியல்வாதிகளால் ஊழலற்ற நிர்வாகம் தர முடியாது! - ரஜினி, கமல் அரசியல் பற்றி திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ஊழலற்ற நிர்வாகத்தை அவர்களாலும் தர முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

ரஜினி, கமல் அரசியல் குறித்து தொல் திருமாவளவன் கூறியது:

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டபோது நான் தெரிவித்த அதே கருத்து நடிகர் கமலுக்கும் பொருந்தும்.

அதாவது அரசியலில் ஈடுபட வரையறை எதுவும் கிடையாது. இந்திய குடிமகனாக இருந்தால் மட்டும் போதும். முன்பே போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். சேவை செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை எதுவும் இல்லை. வயது வரம்பும் இல்லை.

ரஜினி, கமல் இருவருக்கும் அரசியலில் ஈடுபட முழு உரிமை உண்டு. கமல் ஹாசன் ஒரு நடிகராக இருந்து அரசியல் பிரச்சினைகளில் கருத்து சொல்லி வந்தார். தற்போது அரசியல்வாதிகள் அவரை சீண்டி, சீண்டி அரசியல்வாதியாக ஆவதற்கு இடம் கொடுத்துவிட்டார்கள்.

கமல் ஹாசன் ஆட்சி நிர்வாகம் பற்றி சொன்ன கருத்து ஒன்றும் புதியதல்ல. பொதுமக்களும் பேசுவது தான். உடனே அமைச்சர்கள் ஒருமையில் அவரை சாடினார்கள். இது கமலின் தன்மானத்தை சீண்டியது. ஆகவே இந்தி எதிர்ப்பின் போதே அரசியலுக்கு வந்து விட்டதாக தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

தன்னிலை விளக்கம்

தன்னிலை விளக்கம்

‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்' என்றும் ‘மூடமை தவிர்க்க முனைபவரே தலைவர்' என்றும் கூறி தன்னை ஒரு பகுத்தறிவு வாதியாகவும், தலைவராகவும் அடையாளப்படுத்தி உள்ளார். இவை அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான சைகைகளாக தெரிகின்றன.

அவருக்கும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு. கமல் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ தேவையில்லாதது.

மேலும் சினிமா கவர்ச்சி

மேலும் சினிமா கவர்ச்சி

ஆனால் ரஜினி, கமல் இருவருக்குமே அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் இதை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபட தூண்டுதலாக அமையும். அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் உடையும்.

இவர்கள் இருவருமே அரசியலுக்கு வந்தால் சினிமா கவர்ச்சியில் தமிழகம் மேலும் சில பத்தாண்டுகள் மூழ்கும்.

காமராஜர் போல இருந்தால் மட்டுமே

காமராஜர் போல இருந்தால் மட்டுமே

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகம் என்பது நேர்மையான அரசியல் சிந்தனையாளர்களால் மட்டுமே தரமுடியும். நூறு சதவீதம் சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே அது முடியும். இருவரது கடந்த கால வாழ்க்கை அத்தகைய நம்பிக்கையை தருவதாக இல்லை.

காமராஜரை போல் தொண்டு செய்வதுதான் அரசியல் என்று அரசியல் நடத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

புகழுக்காகவும், அதிகாரத்துக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் அரசியலுக்கு வருவதுதான் தற்போதைய சூழலாக மாறி உள்ளது.

இயல்பானதாக இல்லை

இயல்பானதாக இல்லை

ரஜினி, கமல் இருவரும் இவ்வளவு காலம் சினிமாவில் இருந்து விட்டு தற்போது அரசியலுக்கு வருவது இயல்பானதாக இல்லை.

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகத்தை கவர்ச்சி அரசியல் செய்பவர்ளாகலும், கவர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்களாலும் தர முடியும் என்று உறுதியாக நம்ப முடியாது," என்றார்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வருவதை முதலில் தீவிரமாக ஆதரித்தார். இப்போது கமலும் வரப்போவதாக அறிவித்ததும், நடிகர்கள் நாடாள வந்தால் நாடு சினிமா கவர்ச்சியில் மூழ்கும் என்று விமர்சித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirumavalavan says that both Rajini, Kamal couldn't give a good govt with out bribe in Tamil Nadu.
Please Wait while comments are loading...