பரபர வீடியோ.. மஞ்ச பையில் ஆப்பிள் பழங்களுடன்.. உமா மகேஸ்வரி வீட்டுக்கு சாவகாசமாக சென்ற கார்த்திகேயன்
உமா மகேஸ்வரி வீட்டுக்கு கொலையாளி ஆப்பிள் பழங்களை வாங்கி செல்கிறார்.
Recommended Video
நெல்லை: உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு, உமா மகேஸ்வரி வீட்டிற்கே செல்கிறார். இப்படி பழங்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
போன வாரம் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் கொலை செய்த குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

3 பேரையும் கொன்ற முக்கிய குற்றவாளியான சீனியம்மாள் மகன் கார்த்திகேயனிடம் இது சம்பந்தமாக வாக்குமூலமும் பெறப்பட்டது.
அப்போது, வீடியோவில் கையில் மஞ்சள் பையுடன் போவது யார் என்று போலீசார் கேட்க.. "எங்கே, அதை காட்டுங்க.." என்று வீடியோவை பார்த்த கார்த்திகேயன், "சூப்பர். அது நான்தான்.." என்று சொல்லி உள்ளார்.
"கையில் என்ன மஞ்சள் பை, என்ன இருக்கு அதிலே" என்று போலீசார் கேட்டதற்கு, "அது ஆப்பிள் பழம்" என்று பதிலளித்துள்ளார். "எத்தனை பேர் சேர்ந்து இந்த கொலையை செய்தீர்கள்" என்று கேட்டதற்கு, "நான் ஒத்த ஆள்தான்.. வேற யாரு.. வேற யாராவது இருக்காங்களான்னு நீங்களே கண்டுபிடிங்களேன்" என்று திருப்பி போட்டு பேசியிருக்கிறார்.
இப்படி செய்திகள் வெளிவந்த நிலையில் தான் அது சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், உமா மகேஸ்வரி வீட்டிற்கு கொலை செய்ய கார்த்திகேயன் செல்லும்போது கடையில் பழங்கள் வாங்கி கொண்டு நடந்து செல்கிறார். அந்த பழங்களை ஒரு மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு சாவகாசமாக தெருவில் நடக்கிறார்.
கொலை செய்ய வெறியுடன் ஒருவர் செல்லும்போது ஆயுதங்களை தானே கொண்டு செல்வார்கள்? ஆனால் கார்த்திகேயன் ஏன் ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு போனார் என்பது மட்டும் யாருக்குமே புரியவே இல்லை!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications