திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லையில் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு! இயங்காத குவாரி, கிரசர்களால் உச்சத்தில் விலை

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் நால்வர் பலியானதை தொடர்ந்து குவாரிகள் இயங்காததால் மணல், ஜல்லி, கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்படுவதால் அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டட ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 55 கல்குவாரிகள், 25க்கும் மேற்பட்ட கிரசர்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 6000 முதல் 8000 டன் அளவிற்கு குண்டுக்கல், ஜல்லி, எம் சாண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற.

மேலும் அண்டை மாவட்டங்களாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுவதோடு அண்டை மாநிலமான கேரளாவுக்கு உரிய அனுமதியுடன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 கன்னியாகுமரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழக அரசு அதிரடி.. இந்த 4 மாவட்டத்துக்கும் மழை அறிவிப்பு கன்னியாகுமரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழக அரசு அதிரடி.. இந்த 4 மாவட்டத்துக்கும் மழை அறிவிப்பு

விபத்தால் ஆய்வு

விபத்தால் ஆய்வு

இந்த நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி அடைமிதிப்பான்குளத்தில் உள்ள குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனிம வள துறையின் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 20 நாள் நடை சீட்டு இல்லை

20 நாள் நடை சீட்டு இல்லை

இதற்கிடையே உதவி இயக்குனர் சஸ்பெண்ட்டால் கனிமங்களை கொண்டு செல்வதற்கான நடை சீட்டு கொடுப்பது தடைப்பட்டது. இதனால் குவாரிகள் மற்றும் கிரசர்களில் விற்பனை நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் குவாரி, கிரசர்களில் ஆய்வு செய்து முடித்தனர். இருப்பினும் நடை சீட்டு வழங்கப்படவில்லை.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

இதனால் 20 நாட்களாக குவாரி, கிரசர்கள் இயங்காததால் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி அண்டை மாவட்டகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்படுகின்றனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க கட்டட ஒப்பந்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.

 30 வரை சதவீதம் அதிகரிப்பு

30 வரை சதவீதம் அதிகரிப்பு

நாள்தோறும் 6,000 முதல் 8,000 டன் வரை கனிமங்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேவைப்படும் சூழலை அறிந்த அண்டை மாவட்ட குவாரி, கிரசர் உரிமையாளர்கள் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். மேலும் எம் சாண்ட் விலை டன்னுக்கு ரூ.150 அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை விட தேவை அதிகமாக உள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து கிடக்கின்றன. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு வருவது ஆகிய காரணங்களுக்காக லாரிகளுக்கும் கூடுதலாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. 4 யூனிட் கொண்ட ஒரு லாரி எம்.சாண்ட் திருநெல்வேலியில் உள்ள குவாரியில் வாங்கும்போது 11,500 என இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வருவதற்கு 17 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.

தொழிலாளர்கள் வேலையிழப்பு

தொழிலாளர்கள் வேலையிழப்பு

இதனால் வீடு கட்டுவோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலப்பொருட்கள் கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். இதனால் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய விதிகளுடன் கல், மணல் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 கலெக்டர் கூறுவது என்ன?

கலெக்டர் கூறுவது என்ன?

இதுபற்றி கலெ க்டர் விஷ்ணு கூறுகையில், ‛‛விதி மீறல் குறித்த ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் வெளிமாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். விதிமீறல்கள் தொடர்பான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில தினங்களில் இதற்கான பணி முடிவடையும். குவாரிகள், கிரசர்கள் திறப்பது குறித்து கனிமவளத்துறை தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.

English summary
Construction materials like sand, stone are facing severe shortage in tirunelveli district due to non-operation of quarries following the death of four persons in a quarry accident at adaimithipankulam. Now has been a heavy financial burden due to the importation of goods from neighboring districts. Building contractors and people have been hit hard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X