தீபாவளி அன்று நெல்லை எப்படி இருக்கும்? ஹெலிகாப்டரில் ரெய்டு போலாமா? கட்டணம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வானில் வட்டமடித்து தீபாவளியை கொண்டாட வேண்டுமா? நெல்லையில் ஹெலிகாப்டர் ஜாய் ரைடு என்ற பெயரில் ரூ.5,999 கட்டணத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பெங்களூரில் இருந்து நெல்லை வந்தடைந்த ஹெலிகாப்டரை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்த பள்ளி மாணவ மாணவிகள் - சுற்றுலா ஹெலிகாப்டர் போக்குவரத்தை முறைப்படுத்த தனி இயக்குனர் நியமிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

Helicopter raid

தீபாவளி பண்டிகையை வித்தியாசமான முறையில் வானில் வட்டமடித்து கொண்டாடும் வகையில் திருநெல்வேலியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் ஜாய் ரைடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஒருநாள் பொதுமக்கள் முன்பதிவு செய்து ஹெலிகாப்டரில் பயணித்து, திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை வானில் இருந்து சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு வானில் வட்டமடித்து செல்ல ரூ.5,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் இதேபோன்று 5 நாட்கள் ஹெலிகாப்டர் ஜாய் ரைடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரிக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் நில விற்பனை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகவும் ஹெலிகாப்டர் சவாரிக்கு முன்பதிவு செய்துள்ளது.

பொதுமக்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நெல்லைக்கு ஹெலிகாப்டர் வந்துள்ளதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் அதனை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற திருநெல்வேலி மாவட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் நாளை மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் 'போதையில்லா நெல்லை மாவட்டம்' என்ற நோக்கத்தில் 'போதையை கைவிட்டு விளையாட்டை ஊக்குவிப்போம்' என்ற தலைப்பில் ஹெலிகாப்டர் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஹெலிகாப்டர் சுற்றுலா மற்றும் வான்வழி பயண நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக அரசுக்காக செஸ்னா சைட்டேஷன் வி ரக விமானம் மற்றும் பெல் ரக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டன.

இவற்றின் பராமரிப்பு, இயக்கம், பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க மாநில விமானப் போக்குவரத்து இயக்குனர் என்ற நிர்வாகப் பொறுப்பு உருவாக்கப்பட்டு, இந்திய விமானப் படையில் இருந்து அயல்பணி அடிப்படையில் குரூப் கேப்டன் அந்தஸ்திலான மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது தமிழகத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயன்பாடுகள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களும் சுற்றுலா சார்ந்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் பயணங்களிலும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படும் சூழலில், சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஹெலிகாப்டர் போக்குவரத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை முறைப்படுத்தவும் தனி இயக்குனரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தினர் முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா வளர்ந்து வரும் நிலையில், இதற்கென தனி நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+