நானா பாஜகவின் பி டீம்.. கடும் பதிலடி கிடைக்கும்.. கமல் ஆவேசம்
பாஜகவோடு தன்னை ஒப்பிட்டு பேசுவது கெட்டவார்த்தை பேசுவதற்கு சமம் என்று பாஜகவை கிண்டல் செய்து நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Recommended Video

திருநெல்வேலி: பாஜகவோடு தன்னை ஒப்பிட்டு பேசுவது கெட்டவார்த்தை பேசுவதற்கு சமம் என்று பாஜகவை கிண்டல் செய்து நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நெல்லையில் நடந்த மக்கள் நீதியை மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் மிக நீண்ட நேரம் பேசினார். முக்கியமாக அரசியல் கட்சிகளை எல்லா கிண்டல் செய்து, தனது எதிர்ப்பை காட்டினார்.
இது ஒருக்கட்டத்தில் திராவிட கட்சிகளை மட்டுமில்லாமல், தேசிய கட்சியான பாஜகவையும் கிண்டல் செய்தார். பாஜகவுடன் தன்னை ஒப்பிடுவது கெட்டவார்த்தை பேசுவது போன்றது என்று கூறினார்.

தேசிய அரசியல்
கமல் தனது பேச்சில், நாம் பேசியது எல்லாம் போதும். சில வடநாட்டு வல்லுநர்கள் என்னிடம் தேசிய அரசியல் செய்ய சொல்கிறார்கள். விரைவில் தேசிய அரசியலும் நாம் செய்வோம். தமிழகம் முடிந்த பின் அதுதான்.

கூட்டணி போய்விடும்
தேர்தல் முடிந்த பின் பல கூட்டணிகள் காணாமல் போய்விடும். நீங்களே பொறுத்திருந்து பாருங்கள். எனக்கு நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது. சிலர் நான் செய்ததை பார்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.

கெட்டவார்த்தை பேச வேண்டாம்
என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள். என் மீது கோபம் கொண்டு என்னை பார்த்து கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். என்னை பார்த்து பாஜகவின் பீ டீம் என்று கெட்டவார்த்தை பேசுகிறார்கள்.

எனக்குத்தான் அவமானம்
என்னை பாஜகவின் பீ டீம் என்று சொல்லி அவமானப்படுத்த வேண்டாம். இது போன்ற கெட்டவார்த்தைகளை பேச வேண்டாம். அப்படி நீங்கள் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். நான் யாருடைய பீ டீமும் இல்லை, மக்களின் டீம்.

முடிவு
நாளை மட்டும் நமதல்ல: நாளை மறுநாளும் நமதே.நாம் டெல்லி என்ற தேர்தலை கடந்து செல்ல வேண்டும்.ஆனால் டெல்லியோடு என் பயணம் முடிந்துவிடாது.இது மனக்கோட்டை அல்ல: மக்கள் கோட்டை.மக்கள் நினைப்பதுதான் கோட்டை: அவர்கள் நாடுவதே கொடி: நன்றி, என்று குறிப்பிட்டார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications