"சிலர்" மருத்துவமனையில் இருந்தபோது அடிமட்ட தொண்டன்தான் ஆஸ்பத்திரியில் குவிந்தான்.. கமல் சூசகம்
Recommended Video

நெல்லை: சிலர் மருத்துவமனையில் இருந்தபோது அவர் சேர்த்து வைத்த பணம் வரவில்லை. ஒதுக்கி வைத்திருந்த தொண்டன்தான் மருத்துவமனையில் குவிந்தான் என கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்தார்.
நெல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் நாங்கள் பல அறிஞர்களிடம் பேசி வருகிறோம். கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம்.
மக்கள் விரும்பினால் கொள்கைகளை காட்டுவேன். ஆனால் இதற்கு முன் மக்கள் கொள்கையே பார்க்கவில்லை. என்னுடைய முக்கிய கொள்கை நேர்மைதான்: அது யாரிடமும் இல்லை.

மருத்துவமனை
நான் சரியாக வரிக்கட்டி வருகிறேன். சொத்து சேர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாகும் போது சொத்து கூட வராது. எத்தனை கோடி சேர்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் போது எதுவும் உதவாது.

தொண்டன்
நான் யாரையும் குறிப்பிடவில்லை. காசு சிலருக்கு மருத்துவமனையில் உதவியதா? சிலர் மருத்துவமனையில் இருந்த போது அடிமட்ட தொண்டன்தான் வந்தான்.

கேள்வி
அவர்களுக்கு அப்போது காசு உதவி செய்யவில்லை. கொள்ளை செய்யும் கூட்டமாக அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள். கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள். நம் பிள்ளையைதான் சுட்டார்கள்: நாம் மறக்க கூடாது.

அரசியல்வாதிகள்
மக்கள் நலனே எங்கள் குறிக்கோள். சாதி மறந்து எல்லோரும் ஒன்று சேர்வோம் வாருங்கள். இலவசம் கொடுப்பதற்காக மக்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளுகிறார்கள். அரசியவாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. வெட்கம் இருக்கிறதா? இல்லையா? பதில் சொல்லுங்கள் என்றார் கமல்ஹாசன்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications