லாட்ஜில் ரூம் போட்டும்.. ஜாலியா இருக்க முடியலயே.. எரிச்சலடைந்த சொரிமுத்து, தீபா.. குழந்தை பரிதாப பலி

குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: லாட்ஜ் ரூமில் தங்களால் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதால், குழந்தையை அடித்தே கொன்றுள்ளனர் பெற்ற தாய் தீபாவும் கள்ளக்காதலன் சொரிமுத்துவும்!!

Recommended Video

    செய்தி தெரியுமா | 24-02-2020 | Oneindia tamil Morning news

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ்.. இவர் ஒரு டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி தீபா.. ஃபேஸ் புக் நண்பர்களாக இருந்து.. பிறகு லவ்-ஆக மாறி கல்யாணம் செய்துகொண்டனர்.. 4 வயதில் யோகேஷ் என்று ஒரு மகன்!

    mother killed her baby near nellai

    தீபாவுக்கு வயசு 26.. நர்சிங் படித்திருக்கிறார்.. அந்தோணி பிரகாஷ், லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு போய்விடுவார்.

    இந்நிலையில் தீபா, அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை வசூலிக்க சொரிமுத்து என்பவர் தீபா வீட்டுக்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.. இது கள்ளக்காதலில் வந்து முடிந்தது. இந்நிலையில், கடந்த 20-ந்தேதி குழந்தையை தூக்கிகொண்டு, கள்ளக்காதலன் சொரிமுத்துவுடன் நெல்லை வந்தார்.. புது பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார்கள்.

    நேற்று முன்தினம் குழந்தை கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து விட்டான் என்று அலறியபடி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அவனை தூக்கி கொண்டு ஓடினர்.. ஆனால் குழந்தை யோகேஷ் இறந்துவிட்டான்.. தகவலறிந்து வந்த தந்தை மகனின் உடலை பார்த்து கதறி கதறி அழுதார்... மேலப்பாளையம் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.

    போஸ்ட் மார்ட்டம் செய்ய குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.. பிறகு தீபாவிடம் விசாரணை நடந்தது.. போலீஸை பார்த்ததுமே தாறுமாறாக உளற ஆரம்பித்தார் தீபா.. அதனால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதும்தான் உண்மையை கக்கினார்.. லாட்ஜ் ரூமில் தங்களால் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதால், குழந்தையை அடித்தே கொன்றுள்ளனர் தீபாவும் சொரிமுத்துவும்!! தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+