திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணி கட்சிகளின் துணையோடு ராகுல் பிரதமராவார்... வசந்தகுமார் சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசல்ட்டுக்கு முன்னரே மக்கள் பிரச்சனைக்காக களத்தில் குதித்து கலக்கும் காங்., வேட்பாளர்

    நெல்லை: தனி பெரும்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் துணையோடு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமராவார் என்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், பிரபல தொழில் அதிபருமான வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்த குமார், நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் கனமழையால் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டார்.

    Rahul Will Prime Minister with alliance Partners, Vasantha kumar hopes

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் எனவும், வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    அது என பழக்கம் முத்துக்குமார்.. கோபம் வந்தா மாமியார் காதை கடித்து துப்புவது.. மதுரையில் பரபரப்பு அது என பழக்கம் முத்துக்குமார்.. கோபம் வந்தா மாமியார் காதை கடித்து துப்புவது.. மதுரையில் பரபரப்பு

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சியை சார்ந்து இருக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகளுக்கு வேலை செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

    கன்னியாகுமரி தொகுதியில், வேட்பாளராக களமிறங்கிய வசந்த குமார், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இணையம், வள்ளவிளை உள்ளிட்ட மீனவ கிராமங்களை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்து, தேவைபட்டால் உலக வங்கி நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றார். தேர்தல் முடிவுக்கு முன்னரே, களத்தில் இறங்கி பணியை வசந்த குமார் தொடங்கி உள்ளார்.

    English summary
    Vasantha kumar hopes: Rahul Will Prime Minister with alliance Partners
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X