நீராவி முருகனை பிடிக்க சென்றபோது படுகாயம்.. 4 போலீசார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.. என்ன நடந்தது?
கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய நீராவி முருகனை பல மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே என்கவுண்டர் செய்துள்ளனர்.
திருநெல்வேலி: ரவுடி நீராவி முருகன் தப்பிச்செல்லும் போது தாக்கியதில் காயமடைந்த நான்கு காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை, கொள்ளைகளை செய்த நீராவி முருகனை பல மாதங்களாக தேடி வந்த தனிப்படை காவல்துறையினர் சுட்டுக்கொன்றது எப்படி என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி நீராவி முருகன், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர். இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் குற்றவாளியாக இருந்தார். கொலை கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டி வந்தார் நீராவி முருகன்.

கொலை, கொள்ளை வழக்குகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

இசக்கிராஜா தலைமையில் தனிப்படை
பல மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் இன்று நெல்லை வந்துள்ளனர்.

ரவுடி என்கவுண்டர்
நாங்குநேரிக்கு அவர்கள் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளார். மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த காவல்துறையினர்
ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர் சத்யராஜ், ஷேக் முபாரக், காங்கு மணி, ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காப்புக்காக நடந்த என்கவுண்டர்
செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன், திண்டுக்கல் மாவட்ட கொள்ளை வழக்கில் நீராவி முருகன் தேடப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் முருகனை இங்கு தேடி வந்துள்ளார். களக்காடு பகுதியில் அவரை சுற்றி வளைத்தபோது முருகன் காவலர்களை தாக்கியதால் தற்காப்பிற்காக இசக்கிராஜா அவரது கைதுப்பாக்கியினால் சுட்டதில் முருகன் உயிரிழந்தார் என்று கூறினார்

அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு
நீராவி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார் எஸ்.பி சரவணன். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் நீராவி முருகன். காவல்துறையினர் என்கவுண்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்த அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications