அவசரப்பட்டுட்டியே குமாரு.. தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் செயலை நீங்களே பாருங்க.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று சைக்கிளில் சென்ற சிறுவனை முந்த முயன்ற ​​ஓட்டுநர், திடீரென ஒற்றை கையால் , சைக்கிளில் சென்ற சிறுவனை லேசாக விளையாட்டிற்கு அடிப்பதற்காக கையை ஓங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ ரிக்ஷா நொடிப்பொழுதில் கவிழ்ந்தது. கடையநல்லூர் பெரிய தெருவில் நடந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ பற்றி பார்ப்போம்.

சில ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களுக்குள் ரேஸ் வைத்து ஓட்டுவார்கள். சிலர் இருசக்கர வாகனத்தில் தங்களை முந்தி செல்வோரை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் வேகமாக ஓட்டுவதும் நடக்கும். ஆட்டோவை பொறுத்தவரை இருசக்கர வாகனங்கள் எப்படி எல்லாம் சாலையில் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளதோ, அத்தனை வாய்ப்பும் உள்ள வாகனமாக உள்ளது. என்ன தான் 3 சக்கரம் என்றாலும், சாலையில் பெரிய பள்ளம் இருந்தால், கவிழும் வாய்ப்பு அதிகம்..

tirunelveli tenkasi auto

பெரிய பள்ளத்தில் வாகனத்தை விடும் போது, திடீரென நிலைதடுமாறி விழுந்துவிடும். அதேபோல் பைக்குகளை போல், சிறிய சந்துக்குள்ளும் ஓட்டிச் செல்ல முடியும் என்றாலும், அதிவேகத்தில் சென்றால் சிக்கலாகிவிடும். விளையாட்டிற்கு கூட ஆட்டோ ஓட்டுநர்கள் ஊருக்குள் ரேஸ் வைக்கவோ, கவனக்குறைவாகவோ இருக்கக்கூடாது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஜனவரி 20ம் தேதியான நேற்று மாலை 4 மணி அளவில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சிறுவன் ஒருவரும் சைக்கிளில் சென்றுள்ளார். சிறுவனை முந்திக்கொண்டு ஆட்டோ சென்ற நிலையில் சிறுவனை ஆட்டோ ஓட்டுநர், விளையாட்டிற்காக அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது

அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அடுத்த நொடி அந்த ஆட்டோ முன்பக்கமாக சரிந்து வீட்டின் படிக்கட்டில் கவிழ்ந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர். உடனடியாக ஓடிச்சென்றனர். அங்கு கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்கியதுடன், அதில் காயமடைந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநரின் விளையாட்டுத்தனத்தால் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+