Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு.. பவுல்ராஜுக்கு கிடைத்த வாக்குகள் எத்தனை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் திமுக மேயர் வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றார்.

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மேயர் பதவியை பி.எம்.சரவணன் ராஜினாமா செய்தார்.

Nellai Mayor Election dmk Ramakrishnan

நெல்லை மேயர்: இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் கொடுத்த நிலையில் அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நெல்லையில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதனால், நெல்லையின் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு, நெல்லை எம்.எல்.ஏ அப்துல் வகாப் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இன்று தேர்தல்: இந்தக் கூட்டத்திற்கு பிறகு திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வழக்கம் போல் சைக்கிளிலேயே வந்து ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நேரத்தில் அதிருப்தி வேட்பாளர் பவுல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மற்றும் பவுல்ராஜ் போட்டியில் உள்ளனர். திமுகவிற்கே பெரும்பான்மை இருக்கிறது என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் உள்ள 55 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களும் வாக்களித்தனர்.

இன்று மதியம் 1.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டது. இதில், எதிர்பார்த்தது போலவே கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளார்.

யார் இவர்?: நெல்லை மேயராக தேர்வு செய்யப்பட இருக்கும் கிட்டு ராமகிருஷ்ணன் மிகவும் எளிமையான நபராக திருநெல்வேலி முழுவதும் அறியப்படுகிறார். ராமகிருஷ்ணன் தினமும் காலை 7 மணிக்கு தனது சைக்கிளில் வார்டு முழுவதும் பயணம் செய்வார் என்று நெல்லை மாநகராட்சியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

காலையில், தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா?, வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளதா? என்று பார்வையிட்டு குறைகள் இருந்தால் உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பிரச்சினையை சரி செய்வாராம்..

பைக் ஓட்ட தெரியாது: மாலையில் மீண்டும் சைக்கிளில் சென்று தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா? என்று கண்காணிக்கின்றார். பைக் ஓட்டத்தெரியாது என்பதால் ராமகிருஷ்ணன் சைக்கிளில் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்கிறார்கள்.. அதேவேளையில் தனக்கு பைக் ஓட்ட தெரியாது என்று அவரே பெருந்தன்மையுடன் கூறுகிறார்.

பிறந்தநாள் பரிசா?: வரும் 22-ந் தேதி 59-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ராமகிருஷ்ணன். கிட்டதட்ட பிறந்த நாள் பரிசு போல அவருக்கு மேயர் பொறுப்பு கிடைக்க இருக்கிறது. நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளார். ராமகிருஷ்ணனின் மனைவி காந்தீஸ்வரி. இவர்களுக்கு மகாராஜன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலராக ராமகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது, மாநகர மக்களின் பிரச்சினைகளுக்காக மாமன்றத்தில் தீவிரமாக குரல் கொடுத்ததுடன் கடும் போராட்டங்களையும் முன்னெடுத்து இருக்கிறார். இதையடுத்து 2022-ஆம் ஆண்டும் மீண்டும் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+