காமுக தலைமை ஆசிரியர்.. 11ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச சாட் தொல்லை! தட்டி தூக்கிய திசையன்விளை போலீஸ்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெரும் பள்ளி செயல்பட்டு வருகிறது. திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவியிடம் ஆபாச சாட்
அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் தவறான முறையில் பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது ஏராளமான மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் தவறான முறையில் பழக முயற்சி செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், தாய் தந்தையை இழந்த மாணவி ஒருவரின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக சாட் செய்து வந்துள்ளார் காமக்கொடூர தலைமை ஆசிரியர்.

தலைமை ஆசிரியரை பணி நீக்கம்
இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் இதுபற்றி உடன்டியாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர்.பள்ளி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுபற்றி திசையன்விளை காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

ஒரு வாரமாக தலைமறைவு
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமை ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார் .அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கபட்டது .கடந்த ஒரு வாரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

மடக்கிப்பிடித்த போலீஸ்
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், பதுங்கி இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான தலைமை ஆசிரியருக்கு மனைவி, 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications