வைகோவே தவெகவை முடித்துவிடுவார்.. விஜய்க்கு புரொடக்‌ஷன் ஆபீசராக வேலை செய்கிறார்: காளியம்மாள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தவெக தலைவர் விஜய்க்கு வைகோ தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. தவெகவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதாகவும், விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதாகக் கூறிக்கொண்டு அவருக்கு பின்னால் நிற்பதாகவும் பல்வேறு கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் இப்போது அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாளும் வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார்...!!

நெல்லை தச்சநல்லூரில் அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காளியம்மாள் கலந்து கொண்டு பேசினார். அப்போது வைகோவின் அரசியல் நிலைப்பாடு, தவெகவுக்கு அவர் கொடுத்து வரும் ஆதரவு குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

Vaiko Kaliammal TVK

முரட்டு முட்டு

கூட்டத்தில் பேசிய காளியம்மாள், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது அணையை கட்ட முயற்சிப்பதாகவும், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்படி இருக்கும்போது தவெக ஏன் காங்கிரஸ் கட்சியினருக்கு 2 அமைச்சர் பதவிகளை கொடுத்து அழகு பார்க்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தவெகவுக்கு ஆதரவாக இப்போது 3 பேரை வாடகைக்கு வைத்திருப்பதாக விமர்சித்த அவர், வைகோவை குறிப்பிட்டு, "முட்டுன்னாலும், முட்டு, முரட்டு முட்டு கொடுக்கிறார் வைகோ.. நான் 12ம் வகுப்பு படித்த காலத்தில் வைகோவின் பேச்சைக் கேட்பதற்காக 3, 4 பஸ்களை விட்டுவிட்டு காத்திருந்தேன்.. அப்போது ஒன்றரை மணி நேரம் வைகோ பேசுவார்.. அதை நான் முழுமையாக கேட்டிருக்கிறேன்

ஆனால், வைகோவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, அமைதிப்படை திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போலத்தான் உள்ளது.. அந்த படத்தில் அமைச்சர் சத்யராஜின் டவுசரை எடுப்பது தொடர்பாக மணிவண்ணனுக்கும் மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் வரும்.

அப்போது, "ஏண்டா டேய், அவருடைய டவுசரை 15 ஆண்டுகளாக நான் தான் துவைத்து வருகிறேன். நேற்று வந்த நீ உள்ளே புகுந்து பெரிய ஆளாக வேண்டும் என பார்க்கிறயா?" என்று மணிவண்ணன் பேசுவார். அதேபோலத்தான் வைகோவின் நிலைமையும் உள்ளது..

புரொடக்‌ஷன் ஆபீசர்

விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க என்னால் மட்டுமே முடியும் என்று வைகோ சொல்கிறார்.. இதுவா அவருடைய அரசியல் அனுபவம்? நீ யாருன்னு பாரு, நீ பெரிய மனுஷன். கலைஞரையே எதிர்த்து நேரடியாக நின்ற வைகோ அங்கு புரொடக்‌ஷன் ஆபிசராக வேலை செய்கிறார். பாதுகாப்பு அதிகாரியாம்..

ஒரு காலத்தில் திமுக தலைவர் கருணாநிதியையே எதிர்த்து அரசியல் செய்த வைகோ, இப்போது விஜய்க்கு பின்னால் நின்று செயல்படுகிறார்" என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார்.

துரந்தர் வைகோ

இதையடுத்து கூட்டத்தில் இருந்த அமைச்சரைப் பார்த்து, "அமைச்சர் சற்று ஓரமாக நில்லுங்கள்" என்று கூறிய காளியம்மாள், வைகோ இருக்கும் இடத்தில் ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தொனியில் பேசினார்.

"அங்கிட்டு.... நில்லுங்கள்... கிட்ட வராதீங்க... ஏன்னா... கிட்ட வந்தால் குளோஸ். இவர் எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் ஊத்தி மூடி கழுவி, டெபனிட்டா காலி பண்ணி விட்டு டெலிட் செய்து விட்டுத் தான் வருவார். அதனால் உங்கள் ஆட்சி கலைந்து விடும், போயிடும் என."

எங்கய்யா வைகோ

மேலும், "எங்கய்யா வைகோ இருக்கும் வரைக்கும் எந்த கவலையும் படத் தேவையில்லை. முடித்து விட்டு விடுவார். காசு கொடுக்காத ஒரு துரந்தர்.. அவர். நமக்கான துரந்தர் அவர். இவரெல்லாம் கூட இருந்தும் உங்களை வழி நடத்த ஆளில்லை" என்று கூறினார்.

வைகோவின் அரசியல் அனுபவத்தை ஒருபுறம் குறிப்பிட்டாலும், தவெகவுக்கு அவர் அளித்து வரும் ஆதரவு எந்த அளவுக்கு சரியானது என்ற கேள்வியை காளியம்மாள் எழுப்பியுள்ளார். ஏற்கெனவே பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வைகோவின் தவெக ஆதரவை விமர்சித்து வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த காளியம்மாளின் இந்த பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+