திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு.. மூச்சுத்திணறலால் இறந்ததாக டீன் விளக்கம்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இந்த 4 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக உறவினர்கள் கூறும் நிலையில் இதை அந்த மருத்துவமனையின் டீன் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகமாக நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது பல கட்ட முயற்சிகளை செய்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கை பற்றாக்குறைகளை தீர்த்து வருகிறது.

4 patients died due to asphysia in Tiruvallur govt hospital

இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் நேற்று இரவு உயிரிழந்தனர். இவர்கள் 4 பேரும் ஆக்ஸிஜன் சிலிண்டரை உரிய நேரத்தில் மாற்றாததால்தான் இறந்தனர் என உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில் இரவு 1 மணிக்கு ஆக்ஸிஜன் தீர்ந்து போன நிலையில் அதிகாலை 3.15 மணிக்குத்தான் ஆக்ஸிஜன் சிலிண்டரை மாற்றியுள்ளனர். இதனால்தான் இந்த 4 பேரும் இறந்தார்கள் என உறவினர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இவர்கள் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை மறுத்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் டீன் அரசி கூறுகையில் எங்கள் மருத்துவமனையில் இறந்த 4 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை.

அவர்கள் 4 பேரும் 70 வயதை கடந்தவர்கள். அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக டீன் அரசி தெரிவித்துள்ளார்.

English summary
4 died due to asphyxia in Tiruvallur govt hospital yesterday night.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X