திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது?

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    தைலக்காட்டில் உல்லாசம்... டிரோனை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய ஜோடி

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் சென்னையில் நினைக்க முடியாத அளவிற்கு கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு கோயம்பேடு கொரோனா பரவலும் மிக முக்கிய காரணமாகும் . தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை மருத்துவமனை கொரோனா வார்டில் ஜேஜேவென கூட்டம்.. கிடத்தப்பட்ட சடலங்கள்.. ஷாக்கிங் வீடியோ மும்பை மருத்துவமனை கொரோனா வார்டில் ஜேஜேவென கூட்டம்.. கிடத்தப்பட்ட சடலங்கள்.. ஷாக்கிங் வீடியோ

    திருவள்ளூர் நிலை

    திருவள்ளூர் நிலை

    இந்த நிலையில்தான் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை சோதனைக்கு கொடுக்கப்பட்ட மாதிரிகளில் செய்யப்பட்ட சோதனையில் இந்த முடிவு வந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து கொரோனா மாதிரி சோதனை செய்யப்பட்டது. ஆனால் எங்கும் இத்தனை பேருக்கு கொரோனா வரவில்லை. திருவள்ளூரில்தான் இத்தனை பேருக்கு கொரோனா வந்துள்ளது.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    இந்த 204 பேரில் எல்லோருக்கும் கோயம்பேடு மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் இத்தனை பேர் கொரோனா மூலம் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறை ஆகும். சென்னையில் கூட ஒரே நாளில் கோயம்பேடு காரணமாக இத்தனை பேர் பாதிக்கப்பட்டது இல்லை. இந்த நிலையில் கோயம்பேடு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவள்ளூர் சென்னையை முந்தும் நிலையில் இருக்கிறது.

    எங்கு வந்துள்ளது

    எங்கு வந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் இன்று ஒரே நாளில் 100க்கும் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. அதேபோல் ஆவடி மாநகராட்சி மற்றும் பொன்னேரி திருமழிசை உள்ளிட்ட பேரூராட்சிகள் பகுதிகளில் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. இங்கு மக்கள் கோயம்பேடு மார்க்கெட் சென்று கொரோனாவை பெற்றுள்ளனர். கோயம்பேடு சென்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கிகாரிக்கும்

    மேலும் கிகாரிக்கும்

    திருவள்ளூரில் ஏற்கனவே 290 கேஸ்கள் இருந்தது. தற்போது 204 கேஸ்கள் வந்துள்ளது. இதனால் அங்கு 494 பேருக்கு கேஸ்கள் வந்துள்ளது. கிட்டத்தட்ட அங்கு ஒரே நாளில் கேஸ்கள் இரட்டிப்பாகி உள்ளது. அப்பகுதி மக்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெரும்பாலும் அங்கு ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டது. அங்கு தினமும் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

    English summary
    Coronavirus: Thiruvallur sees 204 cases early in the morning due to Koyembedu in a single day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X