பஞ்சுமிட்டாயை பார்த்ததும் பச்சப்பிள்ளையாய் மாறிய அமைச்சர் நாசர்! ஊஞ்சல் விளையாடி குதூகலம்!
திருவள்ளூர்: பஞ்சுமிட்டாயை பார்த்ததும் பச்சப்பிள்ளையாக மாறி அதை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
இதுமட்டுமல்லாமல் பஞ்சுமிட்டாய் கடை அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.
அமைச்சர் நாசரை பொறுத்தவரை படபடவென கோபம் கொள்ளக் கூடியவர் என்றாலும் கோபம் தீர்ந்தவுடன் குழந்தையை போல் மாறிவிடுவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
சீமான் நிகழ்ச்சிக்கு வழிமாறிச் சென்ற அமைச்சர் நாசர்! பதறிய பி.எஸ்.ஓ.! பின்னணி என்ன?

அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் நாசர், அங்கு ஒரு ரவுண்டு வந்தார். அப்போது ஊஞ்சலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த அவர், அருகில் சென்று ஊஞ்சல் ஆட்டி விட்டதுடன் பூங்கா எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். பிறகு தாமும் குழந்தைகளோடு குழந்தையாக ஊஞ்சலில் அமர்ந்து விளையாடத் தொடங்கிய அமைச்சர் நாசரை கண்டு கட்சியினர் வியந்தனர்.

பஞ்சுமிட்டாய் கடை
இதென்ன பிரமாதம் இன்னுமிருக்கே என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனத்திற்கேற்ப பூங்காவை விட்டு வெளியே வந்து கார் ஏறச் சென்ற அமைச்சர் நாசர் அங்கிருந்த பஞ்சுமிட்டாய் கடையை கண்டதும் அங்கு சென்றார். பஞ்சுமிட்டாய் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு தமது செலவில் போதும் போதும் என்கிற அளவுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்ததுடன் தாமும் பஞ்சுமிட்டாய் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

குழந்தையை போல்
மேலும், தன்னுடன் இருந்த கட்சிக்காரர்களிடம் பஞ்சுமிட்டாய் சாப்பிடுகிறார்களா எனக் கேட்ட அவர் அவர்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் நாசரை பொறுத்தவரை படபடவென கோபம் கொள்ளக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இவர் திடீரென குழந்தையை போல் மாறி ஊஞ்சல் விளையாடி பஞ்சுமிட்டாய் சாப்பிட்ட நிகழ்வு திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

முதல்வர் அறிவுரை
முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரைக்கு பிறகு பொதுவிடங்களில் அமைச்சர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மாறத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. நெகட்டிவ் விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் பாசிட்டிவ் நிகழ்வுகளில் மட்டுமே அமைச்சர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.