மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்.. 6 வனத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையை ஒட்டி வாழும் மக்களிடம் நிலத்துக்கு பட்டா தருவதாகவும், பணம் தராவிட்டால் வழக்கு போடுவதாகவும் மிரட்டி ரூ. 1 கோடி லஞ்சம் பெற்ற 6 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சொந்தமான நிலத்தை பட்டா செய்து தருவதாக கூறி மிரட்டியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருவண்ணாமலை ஜவ்வாதுமலை கிராமங்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை மிரட்டி, வனத்துறை அதிகாரிகள் லஞ்சம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை பட்டா போட்டு தருவதாக கூறி மலை வாழ் மக்களிடம் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வனத்துறையினர் வசூல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Thiruvannamalai javvadhu hills forest

ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட மலைவாழ் மக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் வனத்துறையினர் 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜமுனாமரத்தூர் வனச்சரகர் பிரபு, மேல்பட்டு வனச்சரகர் சுரேஷ், நாடானூர் வனச்சரகர் செங்குட்டுவன் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வனக்காவலர் முத்து, வனவர்கள் அருணகிரி மற்றும் சுப்பிரமணி ஆகியோரையும் சஸ்பென்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா போட்டுத் தருவதாக கூறி மலைவாழ் மக்கள் சுமார் 30 பேரிடம் வனத்துறையினர் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+