திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரெண்டான மாத்திரை அட்டை வடிவிலான அழைப்பிதழ்.. ஹர்ஷ் கோயங்காவையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: சமீபத்தில் மாத்திரை அட்டை போன்ற திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளத்தில் பேசு பொருளான நிலையில், பிரபல தொழிலதிபரும் RPG நிறுவனத்தின் சேரமேனுமாகிய ஹர்ஷ் கோயங்கா இந்த அழைப்பிதழை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Recommended Video

    கரெக்ட்டா தாலி கட்டும்போது.. மணப்பெண்ணை கட்டிப்பிடித்து..விழித்த மாப்பிள்ளை.. ட்விஸ்ட் அங்கேதான்

    ஒரு காலத்தில் மஞ்சளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த திருமண அழைப்பிதழ்கள் தற்போது அழைப்பிதழ்களா இது? எனும் அளவுக்கு வித்தியாசமான மாடல்களில் வந்துவிட்டன.

    A wedding invitation in tablets card form; The surprised businessman shared on his Twitter page

    இதன் தொடர்ச்சியாகதான் திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் மருந்தியல் கல்லூரியில் பணிபுரியும் உதவி கல்லூரி பேராசிரியரான எழிலரசன் மேற்குறிப்பிட்ட டிசைனில் அழைப்பிதழை அச்சிட்டிருந்தார்.

    திருமண அழைப்பிதழ்கள் பொதுவாக இரண்டு காரணங்களுக்காக பயன்படுகின்றன. ஒன்று திருமணம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள. இரண்டாவது கரன்ட் கட் ஆனா எடுத்து வீசிக்கொள்ள. ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் அழைப்பிதழ்களின் இந்த இரண்டு பயன்களையும் கெடுத்துவிட்டதாக பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் புலம்புவதை கேட்க முடிகிறது. ஏனெில் மேலே சொன்னதைப்போல இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை வடிவத்தில் டிசைன் செய்திருக்கிறார்.

    இதை பார்த்தால் அழைப்பிதழ் என்று சொல்லாத அளவுக்கு டிசைன் இருந்திருக்கிறது. பார்த்த மாத்திரத்திலேயே பெருசுகள் முகம் சுளிக்க, 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அழைப்பிதழின் டிசைன் தொற்றிக்கொண்டது. திருமணம் நடந்து முடிந்ததோ இல்லையோ இந்த அழைப்பிதழ் குறித்த பேச்சுக்கள் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. மார்கழி மாத பஜனை கச்சேரி போல சமூக வலைத்தளங்களை திறக்கும் போதெல்லாம் இந்த அழைப்பிதழ்கள் குறித்த பேச்சுகள் மட்டுமே அடிபடுகிறது.

    இது இத்துடன் நின்றுவிடவில்லை. பிரபல தொழிலதிபரும் RPG நிறுவனத்தின் சேரமேனுமாகிய ஹர்ஷ் கோயங்கா இந்த அழைப்பிதழ் குறித்து தனது கருத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த காலத்து மக்கள் புதுமையானவர்களாக மாறிவிட்டனர்" என்று கூறியுள்ளார். சரிங்க எல்லாம் முடிஞ்சது. அப்புறம் என்ன? கடைய சாத்திட்டு கிளம்ப வேண்டியதுதான என்று நீங்கள் நினைத்து இந்த கட்டுரையை கட் செய்துவிட்டு தலைக்கு மேல் இருக்கும் காரியங்களை பார்க்க கிளம்ப எத்தனித்தால் அதுதான் தவறான விஷயம்.

    ஏனெனில், ஒரு மருந்தியல் பேராசிரியர் மருந்து அட்டை போன்று அழைப்பிதழை அச்சடிக்கும்போது நாங்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா? என களத்திற்கு வந்துள்ளனர் வேதியியல் நிபுணர்கள். SEP எனும் மாதத்தை H2O பாணியில் எழுதி தனது பெயரையும் இணையராக வரவுள்ள பெண்ணின் பெயரையும் தனிமங்களை குறியிடும் சிறப்பு எழுத்துக்களை போலவே பிரித்து எழுதி அசத்தலாக தனது அழைப்பிதழை தயாரித்துள்ளார். இந்த அழைப்பிதழ்கள்தான் தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

    அஸ்ஸாமில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை! அஸ்ஸாமில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

    English summary
    (மாத்திரை அட்டை திருமண அழைப்பிதழை பாராட்டிய ஹர்ஷத் கோயங்கா): Businessman and chairman of RPG Group Harsh Goenka is known for his witty social media posts. Now, he has placed the spotlight on a wedding invitation card in his new tweet. The card found a place on Mr Goenka's timeline because of its innovative nature.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X