அண்ணாதுரை - திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர்... இம்முறையாவது வெற்றி வசப்படுமா?
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் சி.என். அண்ணாதுரை.
திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவரான சி.என்.அண்ணாதுரை (46), பி.காம் படித்தவர். இவரது தந்தை பெயர் நடராஜன். ஒப்பந்தகாரர் மற்றும் விவசாயம் இவரது தொழிலாகும். முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவரான அண்ணாதுரையின் மனைவி பல் மருத்துவர் ஆவார்.

அண்ணாதுரை ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப்பெற்று, துரிஞ்சாபுரம் ஒன்றிய துணை தலைவராக இருந்தவர். தற்போது திமுகவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் அவருக்கு அதே தொகுதியை நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கியுள்ளது திமுக.
கடந்த 1957ம் ஆண்டு இந்தத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த இரா.தர்மலிங்கம் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டு மீண்டும் தர்மலிங்கமும், 2009ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த த.வேணுகோபாலும் இங்கு வெற்றி பெற்றனர். திமுகவின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வனரோஜா வெற்றி பெற்று, திமுக வேட்பாளரான அண்ணாதுரையை இரண்டாம் இடத்திற்கு தள்ளினார்.
திமுகவிற்கு முதல் எம்.பி.யைத் தந்தது இந்தத் தொகுதி. தற்போது இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் திருவண்ணாமலையை திமுகவின் கோட்டையாக அண்ணாதுரை மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications