"கருணாநிதியையே மிஞ்சிவிடுவார் ஸ்டாலின்!" புகழ்ந்து பேசிய துரைமுருகன்! சட்டென எ.வ.வேலு தந்த ரியாக்ஷன்
திருவண்ணாமலை: இன்று திருவண்ணாமலையில் நடந்த திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய துரைமுருகன், கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்தார். கருணாநிதி ஆட்சியையே ஸ்டாலின் மிஞ்சிவார் என்றும் ஸ்டாலினுக்கு பிறகு திமுகவின் எதிர்காலமாக உதயநிதி இருப்பதாகவும் துரைமுருகன் பாராட்டிப் பேசினார்.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் பங்கேற்றுப் பேசினார். திமுக இளைஞரணி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிய துரைமுருகன், திமுகவின் எதிர்காலமாக உதயநிதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

துரைமுருகன்
இது தொடர்பாக துரைமுருகன் மேலும் பேசுகையில், "எங்கே முடிகிறது என்று தெரியாத அளவுக்குக் கூட்டம் நிறைந்திருக்கிறது.. மேடையில் இருந்து பேசுவதை விட இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.. அப்படிப்பட்ட நிகழ்வு இது.. அதுவும் வெறும் 91 தொகுதியில் இருந்து வந்திருக்கும் இளைஞர்கள் தான் இது. இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பாராட்டு!
அடுத்து உதயநிதி தான்
இளைஞரணி என்பது ஸ்டாலின் உருவாக்கப்பட்ட ஒன்று.. அதுவும் சிறிய அளவில் கோபாலபுரம் வீதியில்.. நண்பர்களோடு உட்கார்ந்து பேசி பெயரிட்டு அதை உருவாக்கினார். ஆலமரத்தின் விதை மீனின் முட்டையை விடச் சின்னது என்று சொல்வார்கள்.. அப்படி ஒரு சின்ன இடத்திலே ஆரம்பித்தது, இன்றைக்குப் பறந்து விரிந்த ஆலமரமாய் இருக்கிறது திமுக இளைஞரணி. ஸ்டாலினின் அரசியலுக்கும் இளைஞரணி உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஸ்டாலின் உருவாக்கிய ஒன்றை அப்படியே இன்றைக்கு உதயநிதி எடுத்திருக்கிறார்கள். உதயநிதியின் பொலிட்டிக்கல் ஸ்பீச்சை இன்று தான் முதல்முறையாக நேரில் கேட்டேன். உனக்கு ஒரு சல்யூட்!
கட்சிகள் இரு வகை
பொதுவாக அரசியல் கட்சிகளில் சில வகை இருக்கிறது. ஒன்று கட்சியில் தலைவர்கள் இருப்பார்கள்.. ஆனால் அந்த கட்சியில் தொண்டர் இருக்க மாட்டார்.. ராஜாஜி கட்சி மாதிரியான கட்சிகளில் இந்தச் சிக்கல் இருந்தது. இன்னொன்று கட்சியில் தொண்டர்கள் இருப்பார்கள்.. ஆனால் பெரிய தலைவர் இருக்க மாட்டார்கள்.. சோசியலிஸ்ட் கட்சி மாதிரி! இதுபோன்ற கட்சிகள் அழிந்துபோய்விட்டன. இன்னொரு டைப் இருக்கிறது.. தொண்டர்கள் இருக்கிறார்கள் தலைவர் சரியில்லை என்று அது இப்போது இருக்கும் அதிமுக மாதிரி!
ஆனால் திமுகவில் தொண்டர்களும் சரி, தலைவர்களும் சரி இரண்டிலும் வல்லவர்கள் இருக்கிறார்கள்.. அண்ணா மறைந்தபோது.. அண்ணாவுக்கு பிறகு யார் எனக் கேட்டனர். அண்ணாவை அப்படியே உள்வாங்கி அவரது இதயத்தை வாங்கிக்கொண்டு வந்தார் கருணாநிதி.. அதன் பிறகு கருணாநிதி மாதிரி வராது.. என்ன இருந்தாலும் ஸ்டாலினால் கருணாநிதி போல இருக்க முடியாது என்றார்கள். ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின் ஆட்சி இருந்தது.
கருணாநிதியை மிஞ்சிவிடுவார்
நான் அண்ணாவோடு நீண்ட பழகி இருக்கிறேன்.. கருணாநிதியுடன் 53 ஆண்டு காலம் சேவை செய்திருக்கிறேன்.. என்னைப் பொறுத்தவரையில் ஸ்டாலின் ஆட்சி நடத்தும் விதத்தைப் பார்த்தால் கருணாநிதியையே தூக்கி மிஞ்சிவிடுவார் போல் இருக்கிறது" என்றார். துரைமுருகன் இப்படிச் சொன்னதைக் கேட்டு எ.வ.வேலுவும் ஆச்சரியப்பட்டார். துரைமுருகன் பேச்சை ஆமோதிக்கும் வகையில் கைதட்டினார்.

திமுக தேவை
துரைமுருகன் மேலும் பேசுகையில், "இதுதான் இந்த இயக்கத்திற்குப் பெருமை.. ஸ்டாலினுக்கு பிறகு யார் என்றால் இன்றைக்கு உதயநிதி உருவாகிக் கொண்டு இருக்கிறார். அரசியல் கட்சிகள் உருவாகும்.. அழிந்து போகும்.. தமிழ்நாட்டில் எவ்வளவோ கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இப்போது ஒரு கட்சியும் இல்லை. திமுக மட்டுமே நிலைத்து நிற்கிறது. அதற்குக் காரணம் திமுகவுக்குக் கிடைத்த வலுவான தலைமை தான். இந்தக் கட்சியில் தேவை இருக்கிறது. இன்னும் நூற்றாண்டுக் காலத்துக்காவது திமுக ஆட்சியில் இருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு பிறகு இந்த இயக்கத்தை உதயநிதி தூக்கி நிறுத்துவார்" என்றார்.
-
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications