மக்களின் ஒருவனே.. மக்களுக்கான ஒருவனே.. விஜய் சேதுபதியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்
கள்ளக்குறிச்சி: எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம். மக்களின் ஒருவனே மக்களுக்கான ஒருவனே எங்களின் மக்கள் செல்வன் விரைவில் வருக என கள்ளக்குறிச்சியில் விஜய்சேதுபதியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள பிரமாண்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தற்போது வர இருக்கிற 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் கள்ளகுறிச்சி மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் தற்போது வெளியாக இருக்கும் விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம் திரைப்படத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டன.

மக்கள்
அந்த சுவரொட்டியில் "மக்களின் ஒருவனே மக்களுக்கான ஒருவனே எங்கள் மக்கள் செல்வனே விரைவில் வருக". மேலும் "விவசாயிகளே அழிக்க நினைக்கும் காலத்தில் விவசாயத்தை தூக்கிப்பிடிக்கும் எங்கள் விவசாயி" என அரசியல் நெடி தூக்கலாக விஜய்சேதுபதியின் அரசியல் வருகையை எதிர்நோக்கும் வகையில் இருப்பது மாற்று கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

போஸ்டர்
மக்கள் செல்வன் என்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் விஜய்சேதுபதி தனது அரசியல் அத்தியாயத்தை துவக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு
இந் நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து கள்ளக்குறிச்சியில் அவரது ரசிகர்கள் ஸ்டிக்கர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா
அது போல் தேனியிலும் நடிகர் விஜய்க்கு போஸ்டர் ஒட்டப்பட்டு பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்தவுடன் அது கிழிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டவுடன் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டு ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications