திருவண்ணாமலை அருகே காலையிலேயே சோகம்.. அரசு பஸ் கார் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். புதுவையில் இருந்து பெங்களூர் சென்ற காரும், சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. காரில் நண்பர்கள் 4 பேர் இருந்துள்ளனர். புதுவையில் இருந்து பெங்களூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் டிரைவர் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த நண்பர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் பலியான 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. எனினும் விபத்து தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications