3 குழந்தைகளை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் குதித்த தாய்! திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே 3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் ஆற்றில் குதித்ததில், அந்த 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் தனது 3 குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். கூலித் தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும் நிலவரசு, குறளரசு, யாஷினி என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இதில் யாஷினி 7 மாத கைக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அமுதா தனது மூன்று குழந்தைகளோடு நேற்று பிற்பகல் தென் பெண்ணை ஆற்றுக்கு சென்றிருக்கிறார்.

ஆற்றில் குதித்து
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்த அமுதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மூன்று குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு திடீரென தென்பெண்ணை ஆற்றில் குதித்திருக்கிறார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அமுதாவையும் அவரது மூன்று பிள்ளைகளையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் அமுதா உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகள் உயிரிழப்பு
பிள்ளைகள் மூவரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு வாணாபுரம் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 3 பிள்ளைகளுடன் தாய் ஆற்றில் குதித்த நிகழ்வை தான் தேநீர் கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் அப்பகுதியில் பேசி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
அமுதா தனது 3 பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை முடிவை எடுத்ததற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வறுமையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அமுதா தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications