10.50க்கு வெளியேறிய ஸ்டாலின்.. தங்கி இருந்த அறைக்கே போய் சோதனை.. ஐ.டி ரெய்டில் நடந்தது என்ன? பின்னணி
திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் தங்கி இருந்த அறையிலேயே ஐடி ரெய்டு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறது. பண பரிமாற்றம், பிரச்சாரம் ஆகியவற்றை மிகவும் உன்னிப்புடன் கவனித்து வருகிறது. இன்னொரு பக்கம் தற்போது வருமான வரித்துரையும் ஐடி ரெய்டுகளில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது.

ரெய்டு
இந்த நிலையில் இன்று திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டது. ஏ.வ வேலு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போதே இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

சோதனை
திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போதுதான் சரியாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது .சுமார் 4 மணி நேரமாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இன்னும் இந்த சோதனை முடியவில்லை.

நீண்ட ரெய்டு
எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடு, உறவினர்கள் வீடு, கல்லூரி, கல்லூரி ஹாஸ்ட்டல், அறக்கட்டளை, பள்ளிகளிலும் சோதனை நடந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சரியாக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது அங்கு ரெய்டு நடக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின் எ.வ.வேலுவின் கல்லூரியில்தான் தங்கி இருந்தார். அங்குதான் இந்த ரெய்டு தொடங்கியது. ஸ்டாலின் 10.50க்கு காலையில் பிரச்சாரத்திற்கு சென்ற பின் 11.20க்கு ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. ஸ்டாலின் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் அவரின் ரூமில் இந்த ரெய்டு நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே ரூமில்
திமுகவினர் இடையே இந்த ரெய்டு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது, திமுகவின் வெற்றிக்கு பயந்து ரெய்டு நடக்கிறது. அதுவும் ஸ்டாலின் தங்கிய அறையில் ரெய்டு செய்துள்ளனர். அதிமுகவின் அழுத்தத்தின் பெயரில் இந்த ரெய்டு நடந்ததாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications