திருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேற தடை.. கார்த்திகை தீபத்தையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, நாளை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மாவட்டத்தில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக கார்த்திகை நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் மெகா கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி நாளை மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
300 கிலோ எடை கொண்ட கொப்பரை இன்று அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்துக்காக 1500 மீட்டர் திரி, 4500 கிலோ நெய் ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றும் நிகழ்வை காண பக்தர்கள் விரதமிருந்து, மலை ஏறி சென்று வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை காண திருவண்ணாமலை வருவார்கள். இதற்கிடையே தான் இந்த முறை பக்தர்கள் மலையேற தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர். இதையடுத்து கடந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போதும் மழைக்காலம் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கார்த்திகை மகாதீபத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‛‛திருவண்ணாமலை நகரம் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2025-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 03-ம் நாள் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக 2025 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் நாள் சனிக்கிழமை அன்று இயக்கும். மேலே அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 (மத்திய சட்டம் XXVI / 1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2025ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 03 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும்'' என கூறப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications