திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் உடல் பருமன் கொண்டவர்கள் செல்ல தடை! கோயில் நிர்வாகம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் துவாரத்தில் செல்ல உடல் பருமன் கொண்டவர்கள், உடல்நலக் குறைவானவர்கள், வயதானவர்கள் செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவல் பாதையில் ஏராளமான கோயில்கள் உள்ளன. அதில் முக்கியமானது இடுக்கு பிள்ளையார் கோயில். இதனை மோட்ச துவாரம் என அழைக்கிறார்கள்.

Tiruvanamalai Idukku Pillaiyar

இந்த கோயிலில் சிறிய குகை போன்ற அமைப்பு உள்ளது. அதாவது கோயிலின் பின்வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறே உள்ளே நுழைந்து கைகளை ஊன்றிக் கொண்டு நகர்ந்து முன்வாசலுக்கு செல்ல வேண்டும்.

முன்வாசலுக்கு சென்றால் அங்கு நந்தியைும் இடுக்கு பிள்ளையாரையும் வழிபடலாம். இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வெங்கடேசலு மகன் தாசரி மணிக்குமார் (36), தனது குடும்பத்தினருடன் கிரிவலம் சென்றிருந்தார்.

பின்னர் நள்ளிரவு சுமார் 1.40 மணிக்கு இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு வந்தனர். அப்போது தாசரி , குகை வடிவ இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தார். அவரது உடல் பருமனாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் தவித்தார்.

உடனே அங்கிருந்த உறவினர்களும் பொதுமக்களும் அவரை வெளியே இழுக்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் தாசரி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த துவாரத்திற்கு நுழைந்து சிக்கிக் கொண்டார்.

பிறகு அவரை பக்தர்கள் வெளியே இழுத்து காப்பாற்றினர். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது. இது போல் தொடர்ந்து இரு சம்பவங்கள் நடந்த நிலையில் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு உடல்பருமன் கொண்டவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பதாகையை வைத்துள்ளனர்.

இந்த கோயில் தாயின் கருப்பை போல் காட்சி தருவதால் இந்த துவாரத்தில் நுழைந்து செல்வோருக்கு எந்தவித கர்ப்பப்பை பிரச்சினைகளும் வருவதில்லை.

மேலும் பில்லி சூனியம் உள்ளிட்ட கெட்ட சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இடுக்கு பிள்ளையாரை தரிசித்து வருகிறார்கள். இடைக்காட்டுச் சித்தர் என்பவர் இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூன்று யோக யந்திரங்களை புதைத்து வைத்துள்ளதாக ஐதீகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+