அண்ணே ஒரு குவார்ட்டர்! பாட்டிலை பார்த்த குடிகாரருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அப்பறம் நடந்த ட்விஸ்ட்?
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய குவாட்டர் மது பாட்டிலில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடிகாரர் ஒருவர், நியாயம் கேட்டு டாஸ்மாக் கடையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மது விற்பனை பாதிக்கப்பட்டது.
தனக்கு கிடைக்காத சரக்கு யாருக்கும் கிடையாது என சினிமா பட பாணியில் தனக்கு நியாயம் கிடைக்கும் வரை யாருக்கும் சரக்கு கிடையாது என போராட்டத்த்தில் ஈடுபட்டதால் மற்ற குடிகாரர்களும் கடும் அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் 9249 என்ற டாஸ்மாக் கடையில் மது பிரியர் ஒருவர் இன்று குவாட்டர் ஓல்ட் சிக்ரெட் மது பாட்டிலை 135 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடை
அப்போது தான் வாங்கிய மது பாட்டிலில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மது பிரியர் நியாயம் கேட்டு தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியரால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மது பாட்டில் விற்பனை பாதிக்கப்பட்டது.

மதுபாட்டிலில் புழு
மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க வந்து மது பாட்டில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் மது பிரியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மது பாட்டிலில் இருந்த புழுவை கண்டறிந்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் இடம் புழு இருந்ததை காண்பித்து நியாயம் கேட்ட போது, டாஸ்மாக் கடை ஊழியர் இது எனது பொறுப்பு அல்ல ஒல்டு சீக்ரெட் கம்பெனி நிர்வாகம்தான் பொறுப்பு என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளது.

திடீர் போராட்டம்
இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கும் குடிகாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வந்திருந்த மற்றொரு நபர் டாஸ்மாக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்து மது பாட்டில் கையில் ஏந்தி இதை குடித்துவிட்டு நான் இறந்து விட்டால் என் குடும்பத்திற்கு யார் பதில் கூறுவார்கள் என்று ஆவேசமுடன் பேசினார்.

குடிகாரரின் அட்டகாசம்
குறிப்பாக சினிமா பட பாணியில் தனக்கு இல்லாத சரக்கு யாருக்கும் இல்லை என்று மணிவண்ணன் கூறுவது போல புழு இருந்த பாட்டிலை கொண்டு கடையின் முன்பு அமர்ந்து கொண்டு யாரும் சரக்கு வாங்க கூடாது என்று மது பிரியர் நடந்து கொண்ட சம்பவம் அது பிரியர்களிடம் வேடிக்கையாக இருந்தது. பிறகு ஒரு வழியாக அந்த குடிகாரரை சமாதானப்படுத்தி அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications