திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாசில்தார்களுக்கு மொத்தமாக பறந்து வந்த ஆர்டர். அதிரடியாக இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக காரணங்களினால் 12 தாசில்தார்கள் நிலையிலான அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் உத்தரவிட்டிருக்கிறார். செங்கம் தாசில்தார் சு.ராம்பிரபு திருவண்ணாமலை டாஸ்மாக் துணை மேலாளராகவும் (சில்லறை வணிகம்), அங்கு பணியாற்றிய எஸ்.முருகன் திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 12 தாசில்தார்கள் பற்றி விவரம்: செங்கம் தாசில்தார் சு.ராம்பிரபு திருவண்ணாமலை டாஸ்மாக் துணை மேலாளராகவும் (சில்லறை வணிகம்), அங்கு பணியாற்றிய எஸ்.முருகன் திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய வ.ரேணுகா திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி தாசில்தாராகவும் (பறக்கும் படை), அங்கு பணியாற்றிய ஆர்.ராஜராஜேஸ்வரி மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும் (பேரிடர் மேலாண்மை) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tiruvannamalai DRO Transfers 12 Tahsildar-Level Officers for Administrative Reasons

அதேபோல் ஆரணி தனி தாசில்தார் (குடிமை பொருள்) எஸ்.அரிக்குமார் விடுப்பு முடித்து மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆரணி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரே.செந்தில்குமார் ஆரணி தாசில்தாராகவும், ஆரணி தாசில்தார் கவுரி கலசபாக்கம் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), அங்கு பணியாற்றிய இ.லலிதா ஆரணி தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

செய்யாறு சிப்காட் அலகு-2 தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) பி.துரை ஜமுனாமரத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஆர்.பாலமுருகன் செய்யாறு சிப்காட் அலகு-2 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), திருவண்ணாமலை தனி தாசில்தார் வி.ராஜேந்திரன் கீழ்பென்னாத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஆர்.சான்பாஷா திருவண்ணாமலை தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் துணை தாசில்தார் நிலையிலான 5 அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர் நிலையிலான 10 அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+