ஜோதியாக காட்சித் தரும் அண்ணாமலையார்.. மகாதீப நாளான இன்று திருவண்ணாமலையில் மழை பெய்யுமா?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மழை பெய்யுமா என்பது தொடர்பாக பார்க்கலாம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து மகா தீபம் மாலையில் 2,668 உயரத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த மகா தீபத்தை காண்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

Tiruvannamalai rain Annamalaiyar mahadeepam

இதனால் அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகா தீபம் ஏற்றுவதற்கான 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரை நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலையின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அதேபோல் தீபம் ஏற்றுவதற்கு காடா துணியிலான திரியும், 300 கிலோ நெய்யும் தயாராக இருக்கின்றன. கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மகாதீபத்திருநாளான இன்று மழை நிலவரம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனென்றால் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், மழை பெய்தால் சிக்கல்கள் உருவாகலாம்.

அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட போதே, மழை பெய்திருப்பது தெரிய வந்துள்ளது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினார். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, திருமண்ணாமலையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து இன்னும் 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும்.

இதனால் அண்ணாமலையார் கோயிலில் மகாதீபத்தை காண செல்லும் பக்தர்கள் மழைக்கு தயாராக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மலையின் உறுதித்தன்மை குறைந்து பாறைகள் தளர்வாக இருப்பதால், பக்தர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மலையேறிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+