திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜவ்வாதுமலையில் 10ம் வகுப்பு மாணவன் இறப்பின் பின்னணி என்ன? மகாலட்சுமி டீச்சர் சிக்க வைக்கப்படுகிறாரா?

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரியை மகாலட்சுமி 10 ஆம் வகுப்பு மாணவரின் முகப்பருவை ஊசியால் குத்தியதால் அவர் இறந்ததாக கூறப்படும் சம்பவத்தின் உண்மைதன்மை என்ன தெரியுமா. இந்த சம்பவத்திற்கும் மகாலட்சுமிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள்.

ஜமுனாமரத்தூரில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் சிவகாசி எனும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் முகத்தில் இருந்த முகப்பருவை அந்த பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி சேலையிலிருந்த ஊக்கால் குத்தியதால் முகம் வீங்கி உயிரிழந்ததாகவும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் அந்த சிறுவன் முகத்தில் இருந்த முகப்பருவை மகாலட்சுமி குத்தவில்லை. இதெல்லாம் கடந்த ஆட்சியின் ஒப்பந்ததாரர் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிவகாசியின் பெற்றோரை தூண்டிவிட்டு பொய் புகார் கொடுக்க வைத்துள்ளார் என உண்மைச் சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

முகப்பருவை ஊசியால் குத்தியதால் மாணவர் பலி! பழங்குடியினருக்காக போராடிய ஆசிரியை மகாலட்சுமி மீது புகார் முகப்பருவை ஊசியால் குத்தியதால் மாணவர் பலி! பழங்குடியினருக்காக போராடிய ஆசிரியை மகாலட்சுமி மீது புகார்

 ஆசிரியர் மகாலட்சுமி

ஆசிரியர் மகாலட்சுமி

ஆசிரியை மகாலட்சுமி மலைவாழ் மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் தான் வாங்கும் சம்பளத்தை அந்த மக்களுக்கான பள்ளிக்கு செலவிடுகிறார். இது போதாமல் சில கொடை வள்ளல்களிடமும் நன்கொடை வசூலித்து அதையும் பள்ளிக்காகவே செலவிடுகிறார். கிட்டதட்ட 15 ஆண்டுகளாக மலைவாழ் மக்களின் கல்விக்காகவே பாடுபட்டு வருகிறார். இவர் மீது புகார் என்ற நிலையில் உண்மை என்னவென ஆராய்ந்த போதுதான் இனியன் ராமமூர்த்தி என்பவரது பேஸ்புக் போஸ்ட் நமக்கு கிடைத்தது.

அந்த பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

அந்த பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது முற்றடைப்பு (கொரோனா ஊரடங்கு) ஆரம்பிக்கும் சிறிது காலத்துக்கு முன் colors தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்வு நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்வில் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் அருகேயிருக்கும் அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றும் நமது குழந்தைகளின் தோழமை ஆசிரியர் மகாலட்சுமி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதும் நமக்கு நன்கு நினைவிருக்கும்.

ஒரு லட்சம் ரூபாய்

ஒரு லட்சம் ரூபாய்

அந்நிகழ்வின் மூலம் தனக்கு கிடைத்த வரி நீங்கலாக ₹112000 ல் ஒரு மாணவருக்கு மேற்படிப்புக்காக ₹12000 ம் கொடுத்தது போக மீதமிருந்த ₹100000 (ஒரு லட்சம் ரூபாய்) தொகையை தன்னுடைய பள்ளியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்போவதாக ஆசிரியர் மகாலட்சுமி நிகழ்விலேயே கூறியிருந்தார். அதேபோல் நிகழ்வு ஒளிபரப்பாகி தொகைக்கான காசோலை அவருக்கு சேர்ந்தபின், அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த காந்திசாமியிடம் 20-08-2020 அன்று ஒப்படைத்து பள்ளி மேம்பாட்டிற்கான ஏற்பாடுகள் செய்து வைக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.

ஆட்சியர்

ஆட்சியர்

அதனை ஏற்ற ஆட்சியர் 14.11.2020ல் தான் பணி இடமாற்றத்தில் செல்லும்முன் SSS திட்டத்தின் மூலம் பள்ளிக்காக ₹300000 (மூன்று லட்சம் ரூபாய்) மதிப்பில் பள்ளிக்கான புதிய இடத்தில் மதில் சுவர் கட்ட சிறப்பு ஒதுக்கீடு மூலம் ஆணை பிறப்பிக்க, அதற்கான பணி ஒப்பந்தங்களை அப்போதைய ஆளும்கட்சி பிரமுகரான ஒப்பந்தாரர் ஒப்பந்தம் எடுக்கிறார். அதன்பிறகான கொரோனா இரண்டாம் அலை மற்றும் ஆட்சி மாற்றத்தினால் பணி தாமதமாகவே துவங்கியிருக்கிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலும் மதில்சுவர் கட்டாமல் வேறு இடத்தில் குறைவான செலவில் மதில்சுவர் கட்டுகிறார்.

புகார்

புகார்

இதனைக் கேள்வி கேட்டும், BDO விடம் புகாரும் தெரிவிக்கிறார் ஆசிரியர் மாகாலட்சுமி. இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்ததாரர் ஆசிரியர் மகாலட்சுமியை கடந்த நவம்பர் 11ம் தேதி தகாத வார்த்தைகளால் திட்டத் துவங்கி டிசம்பர் மாதம் 10 தேதி வரையிலும் தொடர்ந்து ஒருமாத காலம் அச்சுறுத்தும் வகையில் திட்டிக்கொண்டும் இருந்தவர் அன்றையதினம் பள்ளிக்கு நேரடியாக சென்று பள்ளியை மூடிக் காட்டுகிறேன், உன்னை வேலையைவிட்டு துறதுகிறேன் எனச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் பேசியும் மிரட்டல் வரையும் விடுக்கிறார்.

 மாணவர் சிவகாசி

மாணவர் சிவகாசி

அதன்பின் ஆசிரியர் மகா உயர்அதிகாரிகள் முதற்கொண்டு நெருங்கிய வட்டத்தினர் அனைவருக்கும் வாட்சப் குரல் பதிவின் வழியாக செய்தியனுப்பவும், சில கண்டிப்புகளுக்கு பிறகு கொஞ்சம் அமைதியாகிறது பிரச்சனை. இந்நிலையில் கடந்த மாதம் 20 தேதி 7ம் வகுப்பில் முற்றடைப்பு காரணமாக பள்ளியில் இருந்து சென்ற மாணவர் சிவகாசி வயது 15, கடந்த ஆண்டு பள்ளிக்கு வராமல் தற்போது நேரடியாக 10ம் வகுப்பில் சேர்கிறார். இந்நிலையில் விடுதியில் இருந்த அவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி காலை முகத்தில் ஏதோவொரு கட்டி போன்று தென்பட்டுள்ளது. அதனை அந்த மாணவரே நகத்தால் கிள்ளி கீறி விடவும் ரத்தம் வந்துள்ளது. அதனைக் கவனித்த ஆசிரியர் மகாலட்சுமி பார்க்கும்போது அதில் இருந்து சீழும் வரவே துடைத்துள்ளார்.

அடுக்கம்பாறை மருத்துவமனை

அடுக்கம்பாறை மருத்துவமனை

பின் தான் வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூற ஆசிரியர் மகாலட்சுமியின் அலைபேசியைக் கொடுத்து வீட்டிற்கு பேசச் சொல்லியிருக்கிறார். மாலை 5 மணிமுதல் அம்மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க முயற்சித்தும் அழைப்பு போகாமலேயே இருந்துள்ளது. பின் இரவு 7.20 மணி வாக்கில் மீண்டும் அவர்களாக தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஆசிரியர் மகாலட்சுமி "வயசுப்புள்ள வலியில் அழுகிறான் வந்து அழைத்துச் சென்று என்னான்னு கவனியுங்கள்"எனக் கூறியுள்ளார். 28ம் தேதி இரவு 9 மணி வாக்கில் அம்மாணவரின் அண்ணன் என்பவர் வந்து அழைத்துச் சென்றுள்ளார். அவர் சென்ற விசையமே மறுநாள் பள்ளிக்கு சென்றபின்புதான் தெரியவந்துள்ளது.
பின் மாணவரை வீட்டுக்கு அழைத்து சென்றவர்கள் ஒன்னரை நாளுக்கு பிறகு 30ம் தேதிதான் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கு அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிஎம்சி மருத்துவமனை

சிஎம்சி மருத்துவமனை

அங்கும் பரிசோதனை செய்ததில் பெரிதாக ஏதோ சந்தேகம் எழவும், cmc மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அங்கு சென்றதும் மாணவரின் நிலை கண்டு உடனடியாக icu வில் அனுமதிக்கப்படுகிறார். அதன்பிறகு கிட்டத்தட்ட 20 மணிநேரத்துக்கும் மேலாக வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த மாணவர் இறக்கிறார். அவரது இறப்புக்கு நுரையீரல்கள் இரண்டும் செயலிழந்ததே காரணம் எனக் கூறியிருக்கிறார்கள்.

சேலையில் இருந்த ஊக்கு

சேலையில் இருந்த ஊக்கு

இறந்த அந்த மாணவர் மேலே குறிப்பிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் ஒப்பந்ததாரரும் தற்போதைய ஊர் சேர்மன் நிர்வாகத்தின் கீழ் வரும் ஊர் என்பதாலும், அப்பகுதியின் முன்னாள் ஆட்சியாளர் கட்சியினர் சிலரது உதவியுடன் மாணவரின் பெற்றோரை வற்புறுத்தி ஆசிரியர் மகாலட்சுமி தனது சேலையில் குத்தி இருந்த safety pin ன்னால் கட்டியை உடைத்ததுதான் காரணம் எனச் சொல்லி ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் கம்பலைன்ட் கொடுக்கப்படுகிறது. (மகாலட்சுமி பள்ளிக்கு சேலை அணிந்து செல்வதில்லை)

விசாரணையில் உண்மை

விசாரணையில் உண்மை

பிறகு காவல்துறையினர் பள்ளி விடுதியில் சக மாணவர்களிடம் விசாரணை செய்ததில் அப்படியொரு நிகழ்வு நடைபெறவேயில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். உடன் மாணவரின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் காவல்துறையின் கள விசாரணையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது தவறில்லை எனத் தெளிவு படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் ஊர் மக்களிடமும் அப்பகுதியில் இருந்து அதேபள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடமும் முன்னாள் ஆட்சியாளர்களின் கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் மகாலட்சுமிதான் காரணம் எனச் செல்லச்சொல்லி வற்புறுத்த அவர்கள் மறுப்பு தெரிவித்தநிலையில் மாணவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளது.

ஆதரவு குரல்

ஆதரவு குரல்

ஊர் மக்களும் ஆசிரியர் மகாலட்சுமிக்கு ஆதரவான குரல் வந்தநிலையில் நேற்று ஆசிரியர்கள் யாருமற்றநிலையில் அப்பகுதி முன்னாள் ஆட்சியாளக் கட்சி பிரமுகர் ஒருவர் பள்ளியில் நுழைந்து பள்ளியையும், மாணவர்களையும் வீடியோ எடுத்துவிட்டு மாணவர்களை மிரட்டிச் சென்றுள்ளார் என்னும் தகவலும் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஆட்சியாளர்கள் கட்சியினர் ஆசிரியர் மகாலட்சுமியின் மீது அவதூறு செய்தி பரப்பி அதனை சில ஊடகங்கள் மூலம் செய்தியாக்கி விட்டிருக்கின்றனர். காலை முதல் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆசிரியர் மகாலட்சுமியின் பிரச்சனையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஊடகங்களும் செய்திகள் வெளிவிட்டு வருகிறன.
அரசு துறைகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மேலும் ஏற்கனவே தன்னை மிரட்டியவர்கள் மீது ஆசிரியர் மகாலட்சுமி காவல்துறையில் கம்பலைன்ட் கொடுத்துள்ளார். கூடுதல் தகவலாக ஆசிரியர் மகாலட்சுமி விடுதி காப்பாளர் அல்ல. அங்கு ஏற்கனவே ஆசிரியர்கள் பாற்றாகுறை இருப்பதை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார்.

இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Here is the truth behind 15 years old boy died in Jamumanarathur school and complaint given against Teacher Mahalakshmi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X