வாட்ஸ்ஆப் வளைகாப்பு! மகிழ்ச்சியில் திளைத்த தமிழ்செல்வி! திருவண்ணாமலை மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும் பெண்கள் தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் வகையில் சிக்கல்களில் சிக்கி வருவதாக புகார்கள் இருந்தாலும் ஒரு சில நல்ல சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கிறது
அப்படி ஒரு சம்பவம் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்திலுள்ள ஃபீனிக்ஸ் சிறப்புப் பள்ளியில் வாட்ஸ் ஆப் மூலம் ஒன்றிணைந்த நண்பர்களால் நடைபெற்றிருக்கிறது.

மாற்றுத்திறனாளி தம்பதி
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார்(28) அவரது மனைவி மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி(24) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு
காதல் திருமணம் நடைபெற்றது இந்த காதல் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளான குமார் மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

வறுமையில் குடும்பம்
மாற்றுத்திறனாளி குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார் போதிய அளவில் வருமானம் இல்லாததால் மாற்றுத்திறனாளி குமார் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் வாடகை வீட்டில் மிகவும் வறுமையில் வாடி வந்தனர். இந்நிலையில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக வளைகாப்பு
இவர்களது வறுமையை பற்றி ஒரு சிலர் அன்னை தெரசா என்கின்ற ஒரு வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர். வாட்ஸ்அப் குழுவில் கண்ட அனைவரும் உதவி தர முன்வந்த பின்னர் நிதி திரட்டி இன்று ஆரணி அருகே
சந்தவாசல் பகுதியில் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளி குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் சிறப்பாக வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

வாட்ஸ்அப் குழு
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அந்த வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை வைத்து வளையகாப்பு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உதவ ஆளில்லாத மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகவும் பாராட்டை பெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications