குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இன்று அதிகாலையில் இருந்து மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இன்று அதிகாலையில் இருந்து மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் சென்றார். விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், பின் திருவாரூருக்கு இரவு 8 மணி அளவில் சென்றார்.

நேற்று திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் இன்று அதிகாலை 7.30 மணிக்கு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

காலையில் என்ன நடந்தது

காலையில் என்ன நடந்தது

காலை 7.10 மணிக்கு திருவாரூரில் திமுக அலுவலகத்தில் இருந்து ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்காக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அதேபோல் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் இன்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

 வீடுவீடாக பிரச்சாரம்

வீடுவீடாக பிரச்சாரம்

முதல்நாள் பிரச்சாரம் என்பதால் ஸ்டாலின் காரில் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. வீடு வீடாக சென்று நேரடியாக வாக்கு சேகரித்தார். தெருக்களில் நடந்து சென்றே ஸ்டாலின் நேரடியாக வாக்குகளை சேகரித்தார். பல மக்களை நேரடியாக சந்தித்து பூண்டி கலைவாணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மக்கள் ஆரவாரம்

மக்கள் ஆரவாரம்

நீண்ட நாட்களுக்கு பின் ஸ்டாலின் இப்படி நேரிடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்கிறார். அதிலும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஊர் என்பதால் அங்கு ஸ்டாலினுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள், மக்கள் என்று பலர் வெடிவெடித்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

செல்பி எடுத்தார்

செல்பி எடுத்தார்

அதேபோல் ஸ்டாலின் அங்கிருந்த குழந்தைகள் பலருடன் செல்பி எடுத்துக் கொண்டார். சாலையில் ஸ்டாலினுக்காக காத்திருந்த குழந்தைகள் அவர் வந்தவுடன் அவர்தான் செல்பி எடுத்துக் கொள்ள சென்றனர். வரிசையாக எல்லோருடனும் ஸ்டாலின் செல்பி எடுத்து, பின் பிரச்சாரம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+