கண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்: "50 வயசாகுது.. உடம்புல கண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசுகிறார்.. மிட்நைட்டில் போன் செய்கிறார்" என்று அரசு டாக்டர் ஒருவர் மீது நர்ஸ்கள் அளித்துள்ள புகார் திருவாரூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
டாக்டர். மணவழகன்.. இவர்தான் இந்த செய்தியின் ஹீரோ! வயசு 50 ஆகிறதே என்பது பற்றியெல்லாம் இவருக்கு கவலையே இல்லை.. "மன்மத டாக்டர்" என்று கேவலமான பெயரை சம்பாதித்து வைத்துள்ளார் இவர்!
சொந்த ஊர் மன்னார்குடி. உள்ளிக்கோட்டை வட்டார மெடிக்கல் ஆபீசராக வேலை பார்த்து வருகிறார். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

ஆபாச பேச்சு
சமீபத்தில், மணவழகன் மீது ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைபார்க்கும் 7 நர்ஸ்கள் ஒரு மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் ஸ்டான்லே மைக்கேலிடம் ஒரு புகாரை கொண்டுவந்தனர். அதில், மணவழகன் டவுள் மீனிங்கில் பேசுகிறார்.. உடம்பில் கண்ட கண்ட இடங்களில் தொட்டு, ஆபாசமாக பேசுகிறார் என்று தெரிவித்தனர்.

டிரான்ஸ்பர்
இதையடுத்து இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, அந்த புகாரும் நிரூபணமானது. அதாவது டாக்டர் நர்ஸ்களிடம் எல்லா சில்மிஷ வேலைகளையும் காட்டியது உண்மைதான் என்று தெரியவந்ததை அடுத்து, உள்ளிக்கோட்டையில் இருந்து தலையாமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு டிரான்ஸ்பர் மூலம் தூக்கி அடிக்கப்பட்டார்.

7 நர்ஸ்கள்
இதோடு எல்லாம் முடிந்தது என்று பார்த்தால், நேற்று முன்தினம், ஏற்கனவே புகார் தந்த அதே 7 நர்ஸ்கள் திரும்பவும், திருவாரூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதே செக்ஸ் டார்ச்சர் புகார்தான். இதையடுத்து அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு அந்த புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மிட்நைட் போன்
பின்னர், மன்னார்குடி மகளிர் ஸ்டேஷனுக்கு புகார் அளித்த 7 பேரும் வந்து அதே புகாரை அளித்தனர். டாக்டர் மணவழகன் காமக்கண்ணுடன் பார்க்கிறார்.. மிட்நைட்ல போன் பண்ணுவார்.. வெட்கமே இல்லாமல் அசிங்க அசிங்கமா செக்ஸ் சம்பந்தமா பேசுவார்" என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, டாக்டர் மணவழகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!












Click it and Unblock the Notifications