திருவாரூர் கலைச்செல்வி தனிமையில் இருப்பது தெரியும்.. தஞ்சாவூர் அரசு ஊழியர் போலீசுக்கு தந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், அரசு ஊழியர் செய்த காரியத்தை பார்த்தீங்களா? ஆன்லைன் ரம்மி விளையாடி, கடைசியில் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டார்.. கடன் கழுத்தை நெரிக்கவும் என்ன செய்தார் தெரியுமா? இதுகுறித்த விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள் என்றாலும், திருவாரூர், தஞ்சாவூர் இரு மாவட்டங்களிலும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. என்ன நடந்தது திருவாரூரில்?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (60). கணவர் மற்றும் மகனை இழந்த இந்த பெண், தனியாக வசித்து வருபவர்..

Tiruvarur Kalaichelvi Case Thanjavur Government Employee s Shocking Confession to Police

திருவாரூர் மாவட்டம்

கடந்த சனிக்கிழமை இரவு கலைச்செல்வி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அவரது தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் கலைச்செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.. பிறகு அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்..

இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்தாலும், மறுநாள் பகல் முழுவதும் யாருக்கும் தெரியவில்லை.. அன்று மாலைதான், கலைச்செல்வி வீட்டில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினார்கள். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

தஞ்சாவூர் அரசு ஊழியர்

இந்தக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த அறிவுமணி (28) என்பவரும் அங்கு இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கொலை நடந்த இடத்தில் போலீசாருடன் சேர்ந்து, அவரும் குற்றவாளியை தேடினார்.. போலீசாரின் விசாரணைக்கு ஓடி ஓடி உதவினார்.. ஆனால், அவரது நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.. உதவி கேட்காமலேயே அறிவுமணி வலிய வந்து ஏன் உதவி செய்கிறார்? யார் இவர்? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, அவரிடம் தங்கள் பாணியில் தனியாக விசாரணை நடத்தினார்கள்.

தனிமையில் கலைச்செல்வி

அப்போதுதான் கலைச்செல்வியை கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்ததாக அறிவுமணி ஒப்புக்கொண்டார்.. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர்.. பிறகு எதற்காக அறிவுமணியை கொலை செய்தார் என்ற விசாரணையும் நடத்தப்பட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான ஈடுபாடு கொண்டவராம் அறிவுமணி.. எந்நேரமும் ரம்மி விளையாடி, லட்சக்கணக்கான ரூபாயை இழந்துவிட்டாராம்.. ஆனாலும், விளையாட்டு மோகம் குறையாமல், வெளியிலிருந்து கடன் வாங்கி ரம்மி விளையாடியிருக்கிறார்.. இதற்கு பிறகு கடன் சுமையில் சிக்கி விட்டாராம்..

ஆன்லைன் ரம்மி மோகம்

கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தவித்தபோதுதான், தனியாக வசித்து வந்த கலைச்செல்வியைக் குறிவைத்ததாக கூறப்படுகிறது. அவரைக் கொலை செய்து நகைகளைத் திருடினால் கடனை அடைக்கலாம் என்று திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார். கைது செய்யப்பட்ட அறிவுமணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட கடன் சுமையால், ஒரு பெண்ணை கொன்று, இப்போது ஜெயிலுக்கு போயிருக்கிறார் அறிவுமணி.. கடைசியில் அரசு வேலையும் போயிரும் போலயே...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+