குளத்தில் மிதந்து வந்த ரியல் எஸ்டேட் ஓனர்.. மறைந்து நின்று பார்த்த மனைவி.. உல்லாச வாழ்க்கை கொடுமை
திருப்பதி: குடும்ப உறவுகளை அநியாயமாக சிதைக்கும் கள்ளக்காதல் கொடுமைகள் தற்போது பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்த கள்ளக்காதலுக்கு சம்பந்தமேயில்லாமல் பெற்ற குழந்தைகள், தாலி கட்டிய மனைவி, கணவர் என்றெல்லாம் பார்க்காமல், சர்வ சாதாரணமாக கொலைகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், ஆந்திர மாநிலத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்திலுள்ளது பொதுகுந்தா கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மஞ்சுநாதா.. 40 வயதாகும் இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார்.. மஞ்சுநாதா மனைவியின் பெயர் யமுனா.. 32 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

யமுனா, சித்து உறவு
மஞ்சுநாதா தற்போது பெனுகொண்டா என்ற இடத்தில் வசித்து வருகிறார்.. சமீபத்தில்தான் இந்த பகுதிக்கு குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார்.. இந்நிலையில், யமுனாவுக்கும், சித்து என்ற 35 வயது நபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.. இது தகாத உறவாக வளர்ந்துள்ளது..
இந்த விஷயம் தெரிந்த மஞ்சுநாத், மனைவியை கண்டித்திருக்கிறார்.. ஆனால், யமுனா கணவனின் பேச்சை கேட்காமல், தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. நாளுக்கு நாள் கணவரின் அட்வைஸ் அதிகமானதால், எரிச்சலடைந்த யமுனா, கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.. இதற்காக கள்ளக்காதலன் உதவியுடன், நூர்முகமது (28), மதன்மோகன் (30), பிட்டி (32) ஆகியோருடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டப்பட்டது.
டிரிங்க்ஸ் பார்ட்டி
கடந்த வருடம் ஏப்ரல் 22ம் தேதி தன்னுடைய பிசினஸில் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் டிரிங்ஸ் பார்ட்டி வைத்திருப்பதாகவும், அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மஞ்சுநாதாவை, சித்து அழைத்தார். அதன்படியே மஞ்சுநாதாவும் சென்றுள்ளார்.. அளவுக்கு அதிகமான மதுவை அவருக்கு ஊற்றி தந்துள்ளனர்..
இதில் போதை தலைக்கேறியதுமே, மஞ்சுநாதாவை அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்கள்.. கணவனை கொலை செய்வதை, அங்கேயே மறைந்திருந்து யமுனா பார்த்து கொண்டேயிருந்தாராம். பிறகு சடலத்தை அங்கிருந்த குளத்தில் வீசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
குளத்தில் மிதந்த உடல்
பிறகு மறுநாள் தன்னுடைய கணவரை காணவில்லை என்று மாமியார் குடும்பத்தினருக்கு போன் செய்து யமுனா அழுதுள்ளார்.. எல்லா இடங்களுக்கும் சென்று தேடுவது போல் நாடகமாடியுள்ளார்.
இதனிடையே, குளத்திலிருந்து மஞ்சுநாதாவின் சடலம் மிதக்க ஆரம்பித்துவிட்டது.. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் துவங்கினர்.. அப்போதுகூட, நாடகமாடியே போலீசாரை சமாளித்துள்ளார் யமுனா.. சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்து சடலத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சுநாதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
உடல் அடக்கம்
கணவர் இறந்த சில தினங்களிலேயே, தன்னுடைய மகன், மகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு யமுனா திடீரென மாயமானார். இதனால் மஞ்சுநாதாவின் பெற்றோருக்கு யமுனா மீது சந்தேகம் வலுத்தது.. இதுதொடர்பாக கடந்த வாரம் தர்மாவரம் போலீசில் புகார் தந்தனர்..
எனவே, ஒரு வருடம் கழித்து, போலீசார் மஞ்சுநாதாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. அப்போதுதான் மஞ்சுநாதா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது அம்பலமானது. அதற்கேற்ப யமுனாவும், டிரிங்க்ஸ் பார்ட்டி வைத்த சித்து இருவருமே மாயமானதால், அவர்கள் மீது சந்தேகம் திரும்பியது..
மாயமான காதல் ஜோடி
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சித்துவின் நண்பர்களான நூர்முகமது, மதன்மோகன், பிட்டி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். ஆனால், காதல் ஜோடி எங்கே என்றே தெரியவில்லை..
கணவரை கொன்று ஒரு வருடம் ஆகிவிட்டதால், தன்மீது எந்த சந்தேகமும் வராது என்று யமுனா நினைத்திருந்தார்.. ஆனால், இப்போது வசமாக சிக்கியிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கள்ள ஜோடி கைதாகலாம் என தெரிகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications