திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..சிறுவனுக்கு லட்டு கொடுத்து வாழ்த்து
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். கோவில் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சிறுவனுக்கு வழங்கி வாழ்த்து கூறினார்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பலரது நம்பிக்கை. அதன் காரணமாகவே பல லட்சக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
அரசியல்வாதிகளும், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களும் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை சில மணிநேரங்களில் தரிசனம் செய்கின்றனர். பல கோடி ரூபாய்களை கோவிலுக்கு நிதியாக தருகின்றனர். தங்கம், வெள்ளி போன்றவைகளையும் காணிக்கையாக வழங்குகின்றனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திர மாநில நிதி அமைச்சர் பி. ராஜேந்திர பிரசாத், திருப்பதி எம்பி குருமூர்த்தி, இணை மாவட்ட ஆட்சியர் டி.கே. பாலாஜி, திருப்பதி நகர மேயர் டாக்டர். சிரிஷா, ஆணையர் அனுபமா அஞ்சலி மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

காணிப்பாக்கம் விநாயகர்
முதலில் அவர் காரில் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மீண்டும் திருப்பதி வந்த அவர், காரில் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஏழுமலையான் தரிசனம்
தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சென்ற அவர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய் வி சுப்பா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்று மூலஸ்தானம் வரை அழைத்து சென்றனர்.

லட்டு பிரசாதம்
ஏழுமலையானை வழிபட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் தீர்த்த பிரசாதங்கள்,நினைவு பரிசுகள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. அவற்றை பய பக்தியுடன் பெற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.

சிறுவனுக்கு லட்டு கொடுத்த நிதியமைச்சர்
கோவில் பிரகாரத்தில் வலம் வந்த நிர்மலா சீதாராமன் அங்கிருந்த பக்தர்களிடம் பேசினார். அப்போது ஒரு சிறுவனிடம் அவனது படிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்த அவர், பெருமாளின் லட்டு என்று கூறி சிறுவனுக்கு வழங்கினார். அதை சிறுவன் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார்.

வருமான வரி கருத்தரங்கம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் வருமான வரி கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications