பொண்ணு யாருக்கு? உனக்கா? எனக்கா? இதுதான் சண்டையே.. வெட்டுக் குத்து.. 2 பேர் காயம்!!

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பொண்ணு யாருக்கு? உனக்கா? எனக்கா? இதுதான் சண்டையே!!

ஒரே பெண்ணை காதலிப்பதில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறி சரமாரி தாக்கி கொண்டனர். இவை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் டோன் என்ற சிறுநகரம் உள்ளது. இங்கு அரசு ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகரத்திலேயே இதுதான் பெரிய காலேஜ்.

மாணவர்கள்

மாணவர்கள்

அதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்குதான் வந்து படித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினந்தோறும் இங்கு படிக்க வந்து செல்கிறார்கள். இங்குதான் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. அது ஒரு லவ் மேட்டர். ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி போடுகிறார்கள்.

பெண்ணுக்காக சண்டை

பெண்ணுக்காக சண்டை

அந்த பெண்ணை யார் லவ் பண்ணுவது என்ற பிரச்சனை ரொம்ப நாளாகவே 2 பேருக்கு நடுவில் போய் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை 2 ஆண்கள் காதலிப்பது என தொடங்கி கடைசியில் இது கோஷ்டி மோதல் வரை போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த குரோதம் வன்முறையாக வெடித்தது. இரு கோஷ்டிகளும் காலேஜ் கிரவுண்டில் பயங்கரமாக முட்டிக் கொண்டார்கள்.

2 பேர் படுகாயம்

2 பேர் படுகாயம்

கையில் கிடைப்பதை வைத்து ஆளாளுக்கு தாக்குதல் நடத்தினார்கள். இந்த மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக டோன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இந்த மோதல் குறித்து டோன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அசிங்கமா இருக்கு

அசிங்கமா இருக்கு

காலேஜ் கிரவுண்டில் இப்படி இரு தரப்பினரும் தாக்கி கொள்வதை அங்கிருந்த மாணவர்கள் செல்போனில் படம் பிடித்து அதை இணையத்தில் வைரலாக்கி விட்டுள்ளார்கள். அந்த வீடியோ பார்த்தால் சினிமாவை மிஞ்சி இருக்கிறது ஃபைட் சீன்கள்! ஒரு பெண்ணுக்காக இப்படி காலேஜே அடிச்சிக்கிட்டதை பார்த்தால் ரொம்ப அசிங்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கு!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+