திருப்பதியில் ஜன.13ல் வைகுண்ட ஏகாதசி,14ல் துவாதசி - ஒரு மாதத்திற்கு இனி திருப்பாவை ஒலிக்கும்
திருமலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு திருப்பாவை ஒலிக்கும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2022ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 14ஆம் தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 11 முதல் 14ஆம் தேதி வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணைய தளம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது. எம். பி. சி. 34, கவுஸ்துபம் ஓய்வறை, டி.பி.சி. கவுண்ட்டர், ஏ.ஆர்.சி. கவுண்டர்களில் ஜனவரி மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்படமாட்டாது.
நன்கொடையாளர்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது. தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சந்நிதானம், கோவிந்தசாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும்.
நேரடியாக வரும் விஐபிகளுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும். சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து3.30மணிவரை சுப்ரபாதசேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதசேவை ரத்து செய்யப்படும். இந்த ஆண்டு தினமும் நடந்து வந்த சுப்ரபாதசேவை ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications