திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா? அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ரிலீஸ் எப்போது?
சென்னை: திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரியும் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை காலங்களில் தினசரியும் 1 லட்சம் பேர் வரை சாமி தரிசனத்திற்கு வருவதால் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதாக உள்ளது.

திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கு உள்ளது அதன் காரணமாகவே பலரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியின் போதும் புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் திருவிழாவின் போதும் பல லட்சம் பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20ஆம் தேதி உறியடி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி பலராமர் ஜெயந்தி, 30ஆம் தேதி வராஹ ஜெயந்தி, 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா திருப்பதியில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். அக்டோபர் மாதம் 1ஆம்தேதி கருட சேவை, 2ஆம் தேதி தங்க தேரோட்டம், 4ஆம் தேதி தேரோட்டம், 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
செப்டம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் விற்பனை கடந்த மாதம் முடிவடைந்தது. அக்டோபர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான விரைவு தரிசன டிக்கெட் வரும் 18ஆம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1-5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1-5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications